Viral Video : இவ்வளவு மோசமா?.. அலற வைக்கும் டெல்லி காற்று மாசு வீடியோ!

Footages Show Delhi Pollution | டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரியா மற்றும் டெல்லியின் காற்றின் தரத்தை வெளிப்படுத்தும் விதமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : இவ்வளவு மோசமா?.. அலற வைக்கும் டெல்லி காற்று மாசு வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

09 Nov 2025 00:21 AM

 IST

டெல்லி கடுமையான காற்று மாசை எதிர்க்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாளுக்கு நாள் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக டெல்லி மாறிவருகிறது. ஏற்கனவே கடும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பல வகையான உடல்நல சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி மற்றும் ஆஸ்திரேலியாவின் காற்றின் தரத்தை ஒப்பிட்டு பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மிகவும் அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ள நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெல்லியில் கடும் காற்று மாசு

டெல்லியில் மிக கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சுவாச கோளாறு காரணமாக ஏராளமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். டெல்லியின் காற்று மாசு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் டெல்லியின் வானிலையையும், ஆஸ்திரேலியா வானிலையையும் ஒப்பிடும் விதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : அபராதத்தில் இருந்து தப்பிக்க இப்படியா.. ஹெல்மெட் இல்லாததால் கடாயால் தலையை மறைத்த நபர்!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஆஸ்திரியா மற்றும் டெல்லியின் காற்றின் தரத்தை காட்டும் விதமாக உள்ளது. அதில் ஆஸ்திரியா வீடியோ காட்சிகள் மிகவும் தெளிவானதாகவும், நீல நிறத்திலும் உள்ளது. ஆனால், டெல்லியின் வானிலையோ கடும் புகை மூட்டம் சூழப்பட்டதை போல காட்சியளிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குதிரையில் Patrol சென்ற துபாய் போலீஸ்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கடும் அதிர்ச்சியில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.