Viral Video : கையில் பாம்புகளை பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்ற ஆண்கள்.. பீகாரில் வினோத சம்பவம்!
Bihar's Snake Festival | இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரங்கள் உள்ள நிலையில், பல வித்தியாசமான விழாக்கள் கொண்டாடப்படும். அந்த வகையில், பீகாரில் உள்ள சிங்கியா காட் என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் தங்கள் கைகளில் உயிருள்ள பாம்புகளை பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி இருக்கும் நிலையில், இங்கு ஒரு கூட்டமே பாம்புகளை கையில் எடுத்துக்கொண்டு படை எடுத்துச் செல்கிறது. பீகாரில் (Bihar) தான் இந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, நாக பஞ்சமி தினத்தன்று சிறப்பு பூஜையில் பங்கேற்பதற்காக பீகாரில் நூற்றுக்கும்மேற்பட்ட ஆண்கள் தங்களது கைகளில் உயிருள்ள பாம்புகளை பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புகளை கையில் பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்ற ஆண்கள்
இந்தியா பல்வேறு பகுதிகளாக பிரிந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அந்த மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும், பகுதிகளிலும் பல வித்தியாசமான பழக்க வழக்கங்கள் பின்பற்றப்படும். ஒவ்வொரு பகுதியை சேர்ந்த மக்களுக்கும் அவர்களுக்கென தனி மரபுகளையும், வழிபாட்டு நெறிமுறைகளும் கொண்டிருப்பர். அந்த வகையில் பீகாரில் ஆண்கள் சிலர் பாம்புகளை கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று பாரம்பரிய நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : Viral Video : நீர்வீழ்ச்சியின் விளிம்பில் உயிருக்கு போராடிய நபர்.. கையிறு கொண்டு காப்பாற்றிய பொதுமக்கள்.. பகீர் வீடியோ!
பீகாரில் உள்ள சிங்கியா காட் என்ற பகுதியில் நாக பஞ்சமி விழாவை கொண்டாடுவதற்காக அவர்கள் இவ்வாறு சென்றுள்ளனர். இவ்வாறு ஆண்கள் எடுத்துச் சென்ற பாம்புகள் அனைத்தும் உயிருடன் இருந்துள்ளன. இது நூற்றாண்டு பழமை வாய்ந்த விழா என்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான ஆண்கள் இந்த விழாவில் பங்கேற்று பாம்புகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலம் சென்றுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் பாம்பு திருவிழா வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் தங்களது கைகளில் பாம்புகளை பிடித்துக்கொண்டு சாரை சாரையாக ஊர்வலம் செல்கின்றனர். அவ்வாறு ஊர்வலம் செல்லும் அவர்கள் கத்தி கூச்சலிட்டும், கோஷங்களையும் எழுப்புகின்றனர். இந்த ஊர்வலத்தில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பு ஆண்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களது கைகளில் உயிருள்ள பாம்புகளை பிடித்துச் செல்கின்றனர். அவர்களில் சிலர் மிகவும் வித்தியாசமாக கழுத்தில் பாம்பை தொங்க விட்டு வைப்பது, கையில் சுற்றிக்கொள்வது, தலையில் சுற்றிக்கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், கடவுள் நம்பிக்கை, வழிபாடு என்ற பெயரில் பாம்புகளை துன்புறுத்துவதை அனுமதிக்க கூடாது என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.