Viral Video : சிங்கத்துடன் இப்படி ஒரு உறவா.. வியக்க வைக்கும் நபர்.. வைரல் வீடியோ!

Beautiful Relationship Between Man and Lion | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இளைஞர் ஒருவர் சிங்கத்துடன் வைத்துள்ள அழகான நட்பு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : சிங்கத்துடன் இப்படி ஒரு உறவா.. வியக்க வைக்கும் நபர்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

31 Oct 2025 14:28 PM

 IST

பெரும்பாலான பொதுமக்களுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் பிடித்த விஷயமாக உள்ளது. இதன் காரணமாக நாய், பூனை, பறவை, மீன் ஆகியவற்றை பலரும் செல்லப்பிராணிகளாக வைத்துள்ளனர். ஆனால்,  இளைஞர் ஒருவர் காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை தனது செல்லப்பிராணியாக கொண்டுள்ளார். சிங்கத்தை நேரில் பார்ப்பதற்கு கூட தைரியம் இல்லாமல் பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிடுவர். ஆனால், அந்த இளைஞரோ ஒரு பூனை குட்டியை வளர்ப்பதை போல அந்த சிங்கத்தை வளார்க்கிறார். அவர், சிங்கத்துடன் நேரத்தை செலவிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

சிங்கத்துடன் இப்படி ஒரு உறவா – வியக்க வைக்கும் நபர்

பலரும் நாய், பூனை என தங்களது செல்லப்பிராணிகளை தேர்வு செய்யும் நிலையில், அந்த நபர் சிங்கத்தை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அவர் அந்த சிங்கத்துடன் சுமார் 13 ஆண்டுகள் பயனம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் சிங்கத்துடன் காட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மகள்களை தூக்கத்தில் இருந்து எழுப்ப Band வைத்த தாய்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

இணையத்தில் வைராகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அவர் தனக்கும், அந்த சிங்கத்தும்மான உறவு குறித்து பேசியுள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பு சிர்காவுக்கு நான் பாட்டிலில் பால் கொடுத்தேன். ஆனால், தற்போது அவள் எங்கள் இருவரையும் பார்த்துக்கொள்கிறாள். அவள் ஒரு மானை வேட்டையாடி கொண்டு வந்தாள். அதில் இருந்து ஒரு பகுதியை நான் எனக்காக எடுத்து வைத்தேன். பிறகு அதனை சமைத்து சிர்கா உடன் சாப்பிடலாம் என இருந்தேன் என்று கூறுகிறார்.

இதையும் படிங்க : Viral Video : ரயில் கழிவறையை படுக்கை அறையாக மாற்றிய நபர்.. வைரலாகும் வீடியோ!

பிறகு அவர் அந்த மான் கறியை சமைக்கும் போது அந்த சிங்கம் வருகிறது. அந்த நபர் சமைத்த கறியில் ஒரு துண்டை எடுத்து சிங்கத்துக்கு கொடுக்கிறார். ஆனால், சிங்கம் அதனை தனக்கு பிடிக்காததை போல பாவனை காட்டுகிறது. அப்போது அந்த நபர் அவளுக்கு சமைத்த கறி பிடிக்காது என்று கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.