Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : கரணம் தப்பினால் மரணம்.. உடைந்த பாலம் மூலம் சீறிப்பாயும் ஆற்றை கடக்கும் நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Viral Video Shows Man's Risky Bridge Crossing | கடந்த சில நாட்களாக அருணாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பாலங்கள், கட்டடங்கள் மற்றும் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் மிக கடுமையாக பாதிகப்பட்டுள்ளது.

Viral Video : கரணம் தப்பினால் மரணம்.. உடைந்த பாலம் மூலம் சீறிப்பாயும் ஆற்றை கடக்கும் நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 02 Jun 2025 14:54 PM

அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீறிப்பாயும் ஆற்றை, கனமழையால் சேதமான மற்றும் பாதுகாப்பற்ற பாலத்தின் மூலம் கடக்கும் நபரின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

அருணாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக அங்குள்ள பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழையின் காரணமாக அங்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசும் அறிவுறுத்தி வருகிறது.

பாதுகாப்பாற்ற பாலத்தின் மூலம் சீறிப்பாயும் ஆற்றை கடக்கும் நபர்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒருவர் மிகவும் ஆபத்தான ஆற்றை, இடிந்த பாலத்தின் வழியாக கடந்து செல்கிறார். அந்த பாலத்தை தாண்டி தண்ணீர் வேகமாக ஓடும் நிலையில், அந்த நபர் தட்டு தடுமாறி அந்த ஆற்றை கடக்க முயற்சி செய்கிறார். அவரின் அந்த செயலை கண்டு ஆற்றின் கரையில் இருக்கும் சிலர் அவரிடம் ஏதோ கூறுகின்றனர். ஆனால், அந்த நபரோ ஆபத்தை உணராமல் பாலத்தை கடப்பதை இலக்காக கொண்டு மெல்ல மெல்ல பாலத்தில் மீது நடந்து செல்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வீடியோவை பகிர்ந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களை வலியுறுத்திய அமைச்சர்

இந்த வீடியோவை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலக அளவில் அதிக மழையை அருணாச்சல பிரதேசம் எதிர்க்கொண்டுள்ளது. இந்த நபர் மிகவும் ஆபத்தான முறையின் ஆற்றை கடக்கும் வீடியோ எனக்கு கிடைத்தது. பல இடங்களில் பாலங்கள் சேதமாகியுள்ளன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்...
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!...
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...