Viral Video : இதுதான் மனிதாபிமானம்.. குரங்குடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நபர்.. வைரல் வீடியோ!

Man shares his food with monkey | பொதுவாக குரங்கள் மனிதர்களிடம் இருந்து அவர்களது உணவுகளை பிடுங்கி சாப்பிடும் குணம் கொண்டவை. ஆனால், இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒருவர் குரங்குடன் தனது உணவை பகிர்ந்துக்கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Viral Video : இதுதான் மனிதாபிமானம்.. குரங்குடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நபர்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

15 Jun 2025 19:50 PM

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஒருவர் குரங்குடன் தனது உணவை பகிர்ந்துக்கொள்ளும் வீடியோ வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. பொதுவாக குரங்குகள் உணவை எடுக்க வந்தால் அவற்றை விரட்டி விடும் மனிதர்களுக்கு மத்தியில், அந்த நபர் குரங்குக்கு உணவை பகிர்ந்து அளித்த செயல் பலரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குரங்குடன் உணவை பகிர்ந்து சாப்பிட்ட நபர்

பொதுவாகவே குரங்குகள் அதிகம் சேட்டை செய்யும் உயிரினங்களாக உள்ளன. குரங்குகள் எவற்றை குறித்து பயப்படுவதில்லை. இந்த நிலையில், மலை பகுதிகளில் குரங்குகளிடம் சிக்கிக்கொள்ளும் நிலை அவ்வளவு தான். குரங்குகள் மனிதர்களின் கையில் உணவு பொருட்களை வைத்திருந்தால் அவற்றை பிடுங்கி சாப்பிட்டுவிடும்.

இதன் காரணமாக சில சுற்றுலா தளங்களில் கையில் உணவு பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவார்கள். அதையும் மீறி குரங்குகள் கையில் உணவு பொருட்கள் சிக்கிக்கொண்டால் அவற்றை மறந்துவிட வேண்டியது தான். இவ்வாறான சம்பவங்களுக்கு மத்தியில் ஒருவர் குரங்குடன் உணவை பகிர்ந்து சாப்பிடும் வீடியோ இணையத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒருவர் கடையின் வாசலில் போடப்பட்டுள்ள முக்காலியில் அமர்ந்துக்கொண்டு, அங்குள்ள ஒரு சிறிய சுவற்றின் மீது உணவை வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், அந்த சுவற்றின் மீது குரங்கு ஒன்று மெதுவாக நடந்து வந்து அவரின் அருகில் அமர்கிறது. குரங்கை பார்த்ததும் அவர் பதற்றத்தில் எதுவும் செய்யாமல் தன்னிடம் இருக்கும் உணவை எடுத்து குரங்கிடம் கொடுக்கிறார்.

அந்த குரங்கும் அவர் கொடுக்கும் உணவை வாங்கிக்கொண்டு அவரின் அருகில் அமர்ந்து எந்த வித தொந்தரவும் செய்யாமல் சாப்பிடுகிறது. அந்த நபரும் குரங்கு குறித்த எந்த வித பதற்றமும் இல்லாமல் சாப்பிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. மிகவும் அசாதாரனமான செயல் அந்த வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், அது மிகவும் வேகமாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.