ஸ்மார்ட்போனை காரில் சார்ஜ் செய்வதில் இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Impacts of Charging Smartphone In Car USB | பெரும்பாலான நபர்களுக்கு கார் யுஎஸ்பியில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் பழக்கம் உள்ளது. ஆனால், அவ்வாறு சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போனை மிக கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மனிதர்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன் மிக முக்கிய ஒன்றாக உள்ளது. ஸ்மர்ட்போன்கள் இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாது என்ற சூழலில் தான் பலரும் உள்ளனர். ஸ்மார்ட்போன் இவ்வளவு முக்கியமான கருவியாக உள்ள நிலையில், அது இயங்க வேண்டும் என்றால் அதற்கு சார்ஜர் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக சிலர் எங்கு சென்றாலும் கையுடன் சார்ஜரை கொண்டு செல்வது, பவர் பேங்கை கொண்டு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கொண்டிருப்பர். இன்னும் சிலர் தொலைதூர பயணங்களின்போதோ அல்லது சார்ஜ் குறைவாக இருக்கும்போது காரில் யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்வர். ஆனால், அவ்வாறு காரில் சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும் என கூறப்படுகிறது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காரில் சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போன்களுக்கு ஆபத்து – காரணம் என்ன?
வீடுகளில் உள்ள பிளக் பாயிண்டுகளில் வரும் மின்சாரம் சீரானதாகவும், நிலையானதாகவும் இருக்கும். ஆனால், காரில் அப்படி நிலையான மின்சாரம் கிடைக்காது. காரணம், காரின் மின்சார தேவை அதன் எஞ்சின் மற்றும் ஆல்டர்னேட்டரை மையப்படுத்தியதாக இருக்கும். இந்த நிலையில், நீங்கள் காரின் வேகத்தை அதிகரிக்கும்போதோ, ஏசியை போடும்போதோ அல்லது ஹெட் லைட் ஆன் செய்யும்போதோ மின்சாராத்தின் அளவில் மிகப்பெரிய ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். இத்தகைய சீரற்ற மின்சாரம் உங்களது ஸ்மார்ட்போன்களுக்குள் செலுத்தப்படும் பட்சத்தில், மதர்போர்டு மற்றும் பேட்டரியின் சென்சார்கள் குழப்பமடைந்து நாளடைவில் உங்களது ஸ்மார்ட்போன் செயலிழக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : கார் வாங்குற பிளானா? ஜனவரி மாதம் ரிலீசாகவுள்ள டாப் 5 SUV கார்கள்!
போனின் ஆயுளை பாதிக்கும் ஆபத்து
பெரும்பாலான கார்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் யுஎஸ்பி போர்டுகள் போனை சார்ஜ் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல. அவை பென் டிரைவ் மூலம் பாடல் கேட்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அம்சம் மட்டுமே. அதன் காரணமாக அவற்றின் மின் கடத்தும் திறன் மிக மிக குறைவாக இருக்கும். இந்த நிலையில், நீங்கள் அந்த யுஎஸ்பியை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும்போது உங்கள் ஸ்மார்ட்போனில் சார்ஜ் ஏற பல மணி நேரம் ஆகலாம்.
இதையும் படிங்க : பெற்றோர்கள் கவனத்துக்கு! உங்கள் குழந்தைகள் தவறான வீடியோக்கள் பார்க்க கூடாதா? அப்போ யூடியூப் இன்ஸ்டாகிராமில் இத பண்ணுங்க!
நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் சார்ஜிலே இருக்கும் பட்சத்தில் அது வெப்பமடைய தொடங்கும். அதன் காரணமாக ஸ்மார்ட்போனின் பேட்டரி செயலிழக்கும் அபாயம் உள்ளது. எனவே கார் யுஎஸ்பியில் சார்ஜ் செய்வதை தவிர்ப்பது உங்களது ஸ்மார்ட்போனை பாதுகாக்க உதவும்.