WhatsApp : வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம்.. இனி ஈசியா ஸ்டேட்டசை ஷேர் செய்துக்கொள்ளலாம்!

WhatsApp Status Sharing Update | உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் தற்போது ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் ஒருவரின் ஸ்டேட்டசை மற்றொருவர் மிக சுலபமாக பகிர்ந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

WhatsApp : வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம்.. இனி ஈசியா ஸ்டேட்டசை ஷேர் செய்துக்கொள்ளலாம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 May 2025 00:36 AM

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பல மொபைல் செயலிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு, பலரும் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். ஏற்கனவே வாட்ஸ்அப் செயலிக்கு அதிக பயனர்கள் உள்ள நிலையில், மேலும் பல புதிய பயனர்களை ஈர்க்கும் வகையில் வாட்ஸ்அப் அவ்வபோது சில அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்அப்பில் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்கள்

அந்த வகையில் வாட்ஸ்அப் சமீபத்தில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப்பில் இன்ஸ்டாகிராமில் இருக்கும்  அம்சங்களை போல பல புதிய அம்சங்கள் நாளுக்கு நாள் அறிமுகம்  செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் அனுமதி பகிர்வு. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியை ஒருவரை ஒருவர் பகிர்ந்துக்கொள்வதை போலவே வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்துக்கொள்ளும் வகையில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட்டஸ் அனுமதி பகிர்வை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் ஆகியவற்றை ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. முன்னதாக வெறும் புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சமீபத்தில் அவற்றில் பாடல்களை இணைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டசை பயனர்கள் மேலும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது வாட்ஸ்அப்பில் ஒருவர் பதிவிடும் ஸ்டேட்டசை மற்றொருவர் பதிவிடுவதற்கான அனுமதி வழங்கும் புதிய அம்சம் தான் இது. ஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலியில் இத்தகைய ஒரு அம்சம் உள்ளது. அதனை பயன்படுத்தி ஒருவரின் ஸ்டேட்டசை மற்றொருவர் பகிர்ந்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். தற்போது வாட்ஸ்அப்பிலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.