WhatsApp : வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வந்த 4 புதிய அம்சங்கள்..

4 News Status Features of WhatsApp | வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் நலனுக்காக அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ன்அறிமுகம் செய்யப்பட்டுள்ள சில சிறப்பு அம்சங்கள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

WhatsApp : வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வந்த 4 புதிய அம்சங்கள்..

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சங்கள்

Updated On: 

30 May 2025 20:29 PM

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மிக சுலபமாக தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம். ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் மற்றொருவரை மிக சுலபமாக்க தொடர்புகொண்டு பேச உதவும் முக்கிய செயலியாக இது உள்ளது. வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே இத்தனை சிறப்பு அம்சங்கள் இருந்தாலும் மெட்டா நிறுவனம் புதிய பயனர்களை ஈர்க்கும் வகையில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் (WhatsApp Status) 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி

தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், பொதுமக்கள் நொடி பொழுதில் உரையாடுவதற்காக பல செயலிகள்ள் பயன்பாட்டில் உள்ளனர். அவற்றில் மிக முக்கியமான மற்றும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் செயலி தான் வாட்ஸ்அப். வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்தி பரிமாற்றம், ஆடியோ கால், வீடியோ கால் உள்ளிட்ட பல அசத்தல் அம்சங்கள் உள்ளன. இவ்வாறு பல தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என்பதால் இது பலரின் முதன்மை தேர்வாக உள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வந்த 4 புதிய அம்சங்கள் – என்ன என்ன தெரியுமா?

லேஅவுட் அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் புதியதாக லேஅவுட் (Layout) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வேறு ஒரு செயலியில் புகைப்படங்களை கொலாஜ் (Collage) செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது நேரடியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸுக்கே சென்று புகைப்படங்களை கொலாஜ் செய்துக்கொள்ளலாம்.

மியூசிக் ஸ்டிக்கர்கஸ்

இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் இருப்பதை போலவே வாட்ஸ்அப்பிலும் மியூசிக் ஸ்டிக்கர் (Music Sticker) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த செயலியில் பாடலை ஆட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதற்கு ஏற்ப ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்யும் அம்சமும் வந்துள்ளது.

போட்டோ ஸ்டிக்கர்ஸ்

புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக மாற்றும் புதிய அம்சம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக சுலபமாக புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக (Sticker) மாற்றி அதனை ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்யலாம்.

ஆட் யுவர்ஸ்

ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராம் செயலிகளில் உள்ளதை போலவே கொலாப் (Collab) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு நபர்கள் ஒரே விஷயத்தை ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்யலாம்.