WhatsApp : வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தரமான புகைப்படம், வீடியோ பகிர்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
Upload HD WhatsApp Status | பெரும்பாலான பொதுமக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு பகிரும் மக்கள் எவ்வாறு தரமாக தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரலாம் என தெரியாமல் உள்ளனர். இந்த நிலையில், இந்த சிம்பிள் ஸ்டெப்களை பின்பற்றும் பட்சத்தில் மிக சுலபமாக தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பதிவேற்றம் செய்யலாம்.

மாதிரி புகைப்படம்
உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் தகவல் பரிமாற்றம் செய்வது மட்டுமன்றி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கென பிரத்யேகமாக வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேட்டஸ் அம்சத்தில் பொதும்மக்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் (Technology Development) தகவல் தொலைத்தொடர்பு (Information Communication) மிகவும் விரைவாக மாறியுள்ளது. இதன் காரணமாக நொடி பொழுதில் ஒருவரை தொடர்புக்கொண்டு தகவல் பரிமாற முடிகிறது. அவ்வாறு நொடி பொழுதில் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான செயலி தான் வாட்ஸ்அப் (WhatsApp).
வாட்ஸ்அப் செயலியில் பொதுமக்கள் நொடி பொழுதில் தகவல் பரிமாறுவது, உரையாடல் நிகழ்த்துவது உள்ளிட்டவற்றை செய்கின்றனர். இது தவிர புகைப்படங்களை, வீடியோக்களை பகிர்வதற்கான சிறப்பு அம்சமும் வாட்ஸ்அப்பில் உள்ளது. இது பலருக்கும் மிகவும் பிடித்த அம்சமாக உள்ளதால், தங்களது அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்கள், செல்லும் இடங்கள், பிடித்த நபர்கள் என அனைத்தையும் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பகிர்கின்றனர்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் – தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவது எப்படி?
- அதற்கு முதலில் உங்கள் வாட்ஸ்அப் சாட்க்குள் செல்ல வேண்டும்.
- பிறகு அங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் கேமரா ஐகானை கிளிக் செய்து தேவையான புகைப்படம் அல்லது வீடியோவை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு அதில் கொடுகப்பட்டு இருக்கும் HD ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு Send என்பதை கிளிக் செய்து, புகைப்படத்தை HD தரத்தில் மாற்ற வேண்டும்.
- பிறகு புகைப்படம் அல்லது வீடியோவை Long Press செய்ய வேண்டும்.
- பிறகு Share பட்டனை டேப் செய்து, வீடியோ அல்லது புகைப்படத்தை பகிர வேண்டும்.
- ஷேர் செய்யும்போது ஸ்கிரீனில் தோன்றும் My Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.