அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல்.. ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
Amazon Great Republic Day Sale | அமேசான் நிறுவனத்தின் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் ஜனவரி 16, 2026 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் முடிவடைய உள்ள இந்த சேலில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோப்பு புகைப்படம்
அமேசான் (Amazon) நிறுவனம் அவ்வப்போது தனது சிறப்பு சேலை அறிவிக்கும். அந்த வகையில் தற்போது அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலை (Amazon Great Republic Day Sale) அறிவித்துள்ளது. ஜனவரி 16, 2026 முதல் இந்த சேல் தொடாங்கி நடைபெற்று வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்திற்கும் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சேல் நாளையுடன் (ஜனவரி 21, 2026) முடிவடைய உள்ள நிலையில், ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் – ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் எம்07, ரெட்மி ஏ4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்த சேலில் ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படுகின்றன.
சாம்சங் எம்07 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் எம்07 5ஜி ஸ்மார்ட்போன் (Samsung M07 5G Smartphone) ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் அதனை வெறும் ரூ.7,499-க்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி, 50 மெகா பிக்சல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆப்பிள் முதல் ஒன்பிளஸ் வரை.. அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!
ரெட்மி ஏ4 5ஜி
ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் (Redmi A4 5G Smartphone) ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அமேசான் சேலில் வெறும் ரூ.8,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 பிராசசர் மற்றும் 50 மெகாபிக்சல் ரியர் கேமாரா அம்சத்தை கொண்டுள்ளது.
ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 4ஜி (Realme Narzo 80 Lite 4G) ஸ்மார்ட்போன் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அமேசான் சேலில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.7,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மற்றும் 6,300 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Digital Arrest : டிஜிட்டல் கைது மோசடி.. ரூ.14 கோடி பணத்தை இழந்த தம்பதி!
லாவா போல்டு என்1 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் (Lava Bold N1 5G Smartphone) ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் வெறும் ரூ.8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா, 6.75 இன்ச் HD+IPS டிஸ்பிளே ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.