ரூ.9000 தள்ளுபடியில் ரெட்மி நோட் 14 ப்ரோ: இவ்ளோ தான் விலையா?
Massive Discount on Redmi : இந்தியாவில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note 14 Pro ஸ்மார்ட்போனை மிக குறைந்த விலையில் நாம் வங்க முடியும். அமேசான் தளத்தில் கிடைக்கும் இந்த சிறப்பு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
ரெட்மி (Redmi) இந்தியா சந்தையில் பிரபலமான ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனமாக இருந்து வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்குக்கு பிறகு ரெட்மியின் வளர்ச்சி அதிகரித்துளது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக உயர்தர அம்சங்களுடன் கூடிய மாடல்களை மிக குறைவான விலையில் வழங்கி வருகிறது. விலையுயர்ந்த பிராண்ட்களில் கிடைக்க கூடிய சேவைகள் ரெட்மியில் மிக எளிதாக கிடைக்கிறது. எனவே நடுத்தர மக்களின் சாய்ஸாக ரெட்மி இருந்து வருகிறது. இந்த வரிசையில் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான Redmi Note 14 Pro மாடலுக்கு தற்போது Amazon தளத்தில் பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தள்ளுபடி மற்றும் விலை விவரம்
முதலில் ரூ.24,999க்கு அறிமுகமான இந்த மாடல் தற்போது Amazon தளத்தில் ரூ.21,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ. 3,900 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. மேலும், உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் மூலம் கொடுத்து வாங்கும்போது, அதிகபட்சம் ரூ.19,850 வரை தள்ளுபடி விலையில் பெற முடியும். உதாரணமாக, உங்கள் பழைய மொபைலுக்கான விலை ரூ.5,000 என்று மதிப்பீடு கிடைத்தால், புதிய ரெட்மி நோட் 14 புரோ ஸ்மார்ட்போனுக்காக நீங்கள் செலுத்த வேண்டிய தொகை சுமார் ரூ.16,000 ஆகும். இதனால் நீங்கள் ரூ.9,000 வரை சேமிக்க முடியும். ஆனால் ஆஃபர் உள்ள வரை மட்டுமே நம்மால் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது இதில் உள்ள குறிப்பிடத்தக்க விஷயம்
Redmi Note 14 Pro சிறப்பம்சங்கள்
-
6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே, Corning Gorilla Victus 2 கிளாஸ் மற்றும் 120Hz ரிஃப்ரெஷ் ரேட்
-
MediaTek Dimensity 7300 Ultra கொடுக்கப்பட்டிருப்பதால் ஸ்மூத்தான செயல்திறன் மற்றும் விரைவான செயல்பாடு கிடைக்கும்.
-
இந்த ஸ்மார்ட்போனில் பின்புறம் உள்ள கேமராவில் 50MP முதன்மை சென்சார் + 8MP அல்ட்ரா வைடு + 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த போனில் 5,500mAh பேட்டரி 45W வேக சார்ஜிங் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது.
புதிய ரெட்மி A5 மாடல் அறிமுகம்
இதற்கிடையில், ரெட்மி தனது புதிய மாடலான Redmi A5-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடைய வண்ணமயமான டிஸ்பிளே மற்றும் 32MP கேமரா கொண்ட இந்த மாடல், iPhone 16 போன்ற வடிவமைப்பில் அசத்தலான அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்த விலையில் சிறந்த அம்சங்களைத் தேடி வரும் பயனாளர்களுக்கு Redmi Note 14 Pro ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். தற்போதைய தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.