Digital Arrest : டிஜிட்டல் கைது மோசடி.. ரூ.14 கோடி பணத்தை இழந்த தம்பதி!
Digital Arrest Scam | இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் வயதான தம்பதி டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி ரூ.14 கோடி பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மாதிரி புகைப்படம்
தொழில்நுட்ப வளர்ச்சி (Technology Development) பல்வேறு சேவைகள் மற்றும் வேலைகளை மிகவும் எளிமையானதாக மாற்றி வருகிறது. இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு பயனுள்ளதாக உள்ளதோ அதே அளவுக்கு அபத்து மிகுந்ததாகவும் உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பல்வேறு மோசடி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வயதான தம்பதி கோடிக்கணக்கான பணத்தை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14 கோடி பணத்தை இழந்த வயதான தம்பதி
இந்தியாவில் ஆன்லைன் மோசடி (Online Scam) மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு டிஜிட்டல் கைது மோசடியில் (Digital Arrest Scam) சிக்கி ஏராளமான பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். அந்த வகையில், வெளிநாடு வாழ் இந்திய தம்பதி ஒன்று டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14 கோடி பணத்தை இழந்துள்ளது. தாங்கள் டிஜிட்டல் கைதில் உள்ளதாகவும், அதில் இருந்து வெளியே வர உதவுவதாக கூறி அவர்கள் இந்த மோசடியை செய்ததாக அந்த தம்பதி கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : அடிக்கடி போனில் வரும் நோட்டிஃபிகேஷன்களால் தொல்லையா? அப்போ இதை டிரை பண்ணுங்க
தனிப்பட்ட தகவல்களை வைத்து மிரட்டிய கும்பல்
#WATCH | Delhi: An elderly NRI couple was defrauded of Rs 14 crore through digital arrest.
The victim, Dr Indra Taneja, says, “I am very shocked… Thank God we went to the police station and found out that we had been defrauded… All the drama they did was very convincing…… pic.twitter.com/qC889NTKes
— ANI (@ANI) January 11, 2026
அந்த மோசடிக்காரர்கள் தங்களது அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக அவர்கள் கூறியதை அப்படியே நம்பி பணத்தை அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.