Instagram : இன்ஸ்டாகிராமில் இனி Part-2 வீடியோவை தேடி அலைய வேண்டாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

Instagram New Feature | இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். இந்த நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ரீல்ஸில் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

Instagram : இன்ஸ்டாகிராமில் இனி Part-2 வீடியோவை தேடி அலைய வேண்டாம்.. வந்தது அசத்தல் அம்சம்!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Aug 2025 17:20 PM

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ள ரீல்ஸ்க்கு பார்வையாளர்கள் அதிகம். ஏராளமான பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சில குறிப்பிட்ட நேரத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பயன்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயனர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மிகவும் பிரபலமாக உள்ள நிலையில், அதில் பொதுமக்களுக்கு பயனளிக்க கூடிய அசத்தல் அம்சம் ஒன்றை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் செயலி

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், உலக அளவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலியாக உள்ளதுதான் இன்ஸ்டாகிராம். இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு ஆகிய அம்சங்கள் உள்ள நிலையில், பலருக்கும் இது மிகவும் பிடித்த செயலியாக உள்ளது. இவ்வாறு இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலக அளவில் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், மெட்டா அதில் பல அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கும் இன்ஸ்டாகிராமின் புதிய மேப் வசதி – எப்படி தவிர்ப்பது?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் – மெட்டா அறிமுகம் செய்த முக்கிய அம்சம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 3 நிமிடங்களுக்கு மட்டுமே வீடியோ பதிவு செய்ய முடியும். இதன் காரணமாக பெரிய வீடியோக்களை சிலர், சில பாகங்களாக பிரித்து பதிவிடுவர். இவ்வாறு பதிவிடும்போது அது பயனர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும். உதாரணமாக ஒருவர் இரண்டாவது பாகத்தை பார்க்கிறார் என்றால் அந்த நபர் அதற்கான முதல் பாகம் எங்கே என்று தேட வேண்டிய அவசியம் உண்டாகும். இதேபோல முதல் பாகத்தை பார்க்கிறார் என்றால் அதற்கான இரண்டாவது பாகத்தை தேட வேண்டும்.

இதையும் படிங்க : ரீல்ஸ்களை பகிர ரீபோஸ்ட் வசதி, லொகேஷனைப் பகிர ஃபிரெண்ட் மேப்… இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 புதிய அம்சங்கள்

இவ்வாறு ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு தொடர்புடைய மற்ற வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் எடுக்கும். எனவே தான் பயனர்களுக்கு இந்த அம்சத்தை எளிதாக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, Watch Part 2 பட்டனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்கள் பார்க்கும் ஒரே வீடியோவின் கீழ் அதன் தொடர்ச்சியான மற்றொரு வீடியோவின் லிங்க் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் ஒருவரின் கணக்குக்குள் சென்று அதன் தொடர்ச்சியான வீடியோவை தேடாமல் வீடியோவின் கீழ் கிளிக் செய்தாலே மிக சுலபமாக அடுத்த வீடியோவை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.