106.286 கிலோ மீட்டரகள் நடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ரோபோ!
Humanoid Robot Guinness Record | மனித ரோபோக்கள் தொடர்பான தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள அகிபாட் ஏ2 ரோபோட் சுமார் 106.286 கிலோ மீட்டரகள் நடந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இது மனித ரோபோ ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கின்னஸ் சாதனை
தொழில்நுட்பம் (Technology) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பல அட்டகாசமான கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு மனித ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல்லாக உள்ளது தான் மனித ரோபோக்கள். பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த மனித ரோபோக்கள் குறித்த தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சீனாவை சேர்ந்த மனித ரோபோ (Humanoid Robo) ஒன்று அசத்தல் சாதனை படைத்துள்ளது. அதாவது சுமார் 106.286 கிலோ மீட்டரகள் நடந்து கின்னஸ் உலக சாதனை (Guinness World Record) படைத்துள்ளது. இந்த மனித ரோபோவின் கின்னஸ் உலக சாதனை குறித்து விரிவாக பார்க்கலாம்.
106.286 கிலோ மீட்டரகள் நடந்து கின்னஸ் உலக சாதனை படைத்த ரோபோ
சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு அகிபாட் ஏ2 (Agibot A2) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ நவம்பர் 10, 2025 முதல் நவம்பர் 13, 2025 வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளது. சீனாவின் சுகோய் பகுதியில் இருந்து தனது பயணத்தை தொடங்கி இந்த ரோபோ, ஷாங்காய் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள், தெருக்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளது. மொத்தம் மூன்று நாட்கள் இந்த ரோபோ நடைபயிற்சி சோதனைக்கு உள்ளாகியுள்ளது. இந்த சோதனை ரோபோவின் உறுதி திறனை சோதனை செய்வதற்கு மட்டுமன்றி, அது மனிதர்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை அறிந்துக்கொள்ளவும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெறும் ரூ.11.49 லட்சத்திற்கு அறிமுகமான டாடா சியாரா.. மாத தவணை எவ்வளவு வரும்?
நடப்பதை நிறுத்த மறுத்த ரோபோ?
இந்த ரோபோ இந்த சாதனை செய்வதற்கு முன்னதாக பல மாதங்களாக பயிற்சி பெற்றதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு கூறியுள்ளது. 2025 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த ரோபோ கீழே விழுந்துவிடாமல் இருக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2025 அன்று இந்த ரோபோ ஏற்கனவே 24 மணி நேரம் இடை விடாது நடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் தான் இந்த ரோபோ தற்போது இந்த சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க : உங்கள் லேப்டாப் அடிக்கடி வெப்பாமாகுதா?.. இந்த சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
மனித ரோபோக்கள் பல மைல்கல்களை எட்டி வரும் நிலையில், இந்த ரோபோ 106.286 கிலோ மீட்டரகள் நடந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.