ஆடியோ, வீடியோ கால் உடன் எக்ஸ் தளத்தில் அறிமுகமானது சாட் அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?

Chat Feature Introduced in X | ட்விட்டர் செயலியை வாங்கி எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தது முதலே அதில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் இருப்பதை போல சாட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆடியோ, வீடியோ கால் உடன் எக்ஸ் தளத்தில் அறிமுகமானது சாட் அம்சம்.. சிறப்புகள் என்ன என்ன?

மாதிரி புகைப்படம்

Updated On: 

19 Nov 2025 12:44 PM

 IST

ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை வாங்கி எக்ஸ் (X) என பெயர் மாற்றம் செய்தது முதல் எலான் மஸ்க் (Elon Musk) அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். எக்ஸ் செயலியில் அவ்வப்போது பல அசத்தல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் (Instagram) செயலிகளுக்கு போட்டியாக அசத்தல் அம்சம் ஒன்று எக்ஸ் செயலியில் அறிமுகமாகியுள்ளது. அது என்ன அம்சம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எக்ஸ் தளத்தில் அறிமுகமாகி வரும் அசத்தல் அம்சங்கள்

உலக பணக்காரரான எலான் மக்ஸ் 2022 ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கினார். ட்விட்டரை, எக்ஸ் என பெயர் மாற்றம்  செய்தது முதல் அதில் பல்வேறு அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. எக்ஸ் பயணர்கள் யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி புளூ டிக் வாங்கிக்கொள்ளலாம் என்பது முதல் பயனர்களை கவரும் வகையில் பல புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக எக்ஸ் தளத்தில் அறிமுகமான குரோக் ஏஐ பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தான் தற்போது மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விட அசத்தல் அம்சங்கள்.. இந்தியாவில் அறிமுகமானது ஒன்பிளஸ் 15!

வாட்ஸ்அப், இன்ஸ்டாவை போலவே எக்ஸ் செயலிலும் சாட் செய்யலாம்

அதாவது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் சாட் செய்வதை போலவே இனி எக்ஸ் தளத்திலும் சாட் செய்யலாம். அதற்கான அட்டகாசமான அம்சத்தை தான் எக்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தில் ஆடியோ கால் (Audio Call), வீடியோ கால் (Video Call) அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் எண்ட் – டு – எண்ட் என்கிரிப்ஷன் (End – To – End Encryption) மற்றும் ஸ்கிரீன்ஷாட் (Screenshot) எடுக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆன்லைன் முதலீட்டு மோசடி.. ரூ.1.29 கோடி பணத்தை இழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும் அம்சம்

அட்டகாசமான அம்சங்கள் உடனான இந்த சாட் வசதி தற்போது ஐபோன் பயனர்களுக்கு மட்டும் கிடைக்க பெறுகிறது. இந்த நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதியதாக வாகனம் வாங்குபவர்கள் RTO செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..
எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
ஜனவரி 12ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் PSLV C62.. சிறப்புகள் என்ன?
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!