Amazon Summer Sale : பிரபல லேப்டாப் மாடல்களுக்கு 40% வரை தள்ளுபடி!
Amazon Summer Sale : அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 இப்போது தொடங்கி விட்டது. இந்தச் சேலில் HP, Dell, Lenovo, Asus போன்ற பிரபல பிராண்டுகளின் லேப்டாப்கள் 45% வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. வேலை, கல்வி, கேமிங் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற மாடல்கள் சிறந்த சலுகைகளுடன் கிடைக்கின்றன

மாதிரி புகைப்படம்
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025 (Amazon Great Summer Sale) தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் லேப்டாப்புகள், ஸ்மார்ட் டிவிக்கள், ஏசி, ஃப்ரிட்ஜ் மற்றும் பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மே 1 முதல் துவங்கிய இந்த விற்பனை, பிரைம் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது. எச்பி, டெல், லெனோவோ, அசுஸ் போன்ற பிரபல பிராண்டுகளின் லேப்டாப்புகளில் 45% வரை தள்ளுபடி வழங்குகின்றன. உதாரணமாக, Asus Vivobook S14 லேப்டாப் ரூ.1,22,990 இலிருந்து ரூ1,04,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங், எல்ஜி, சோனி போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிக்களில் 60 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. வோல்டாஸ், வேர்ல்பூல், எல்ஜி போன்ற பிராண்டுகளின் ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ்களில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு கிரெடிட் கார்டுகள் மூலம் மாதத்தவணைகளில் பொருட்களை பெறும்போது 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதே போல அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் அளிக்கிறது. எக்ஸ்சேஞ்ச் முறையில் பழைய உபகரணங்களை மாற்றி புதியவை வாங்கும் போது கூடுதல் தள்ளுபடி அளிக்கிறது.
இந்த விற்பனையில், மாணவர்கள், தொழில்முனைவோர், குடும்பஸ்தர்கள் என அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை சிறந்த விலையில் பெற முடியும். மேலும், இந்த சலுகைகள் சில நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் விரைவில் நமக்கு தேவையான பொருட்களை ஆர்டர் போடுவது நல்லது.
அசுஸ் விவோபுக் எஸ்14 (Asus Vivobook S14)
இந்த லேப்டாப் Intel Core i5, 16GB RAM, 512GB SSD, 14″ FHD டிஸ்ப்ளே வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ. 1,22,990 ஆகும். அமேசான் சம்மர் சேலில் ரூ. 18, 000 தள்ளுபடியுடன் ரூ. 1,04,990 கிடைக்கிறது.
டெல் இன்ஸ்பிரேசன் (Dell Inspiron 3530)
இந்த லேப்டாப் 15.6″ FHD டிஸ்ப்ளே, Intel Core i3, 8GB RAM, 512GB SSD என்ற வசதிகளுடன் கிடைக்கிறது. அமேசான் சம்மர் சேலில் இதன் விலை ரூ.37,042 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லெனோவோ வி15 – ஐஜிஎல் (Lenovo V15-IGL)
இந்த லேப்டாப் Intel Celeron N4020, 4GB RAM, 256GB SSD, 15.6″ HD டிஸ்ப்ளே என்ற வசதிகளுடன் கிடைக்கிறது. அமேசான் சம்மர் சேலில் இதன் விலை ரூ.11,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எச்பி லேப்டாப் 15 (HP Laptop 15)
இந்த லேப்டாப் 13th Gen Intel Core i3-1315U, 8GB RAM, 512GB SSD, 15.6″ FHD டிஸ்ப்ளே என்ற அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த அமேசான் சம்மர் சேலில் இதன் விலை ரூ.33, 490 என கூறப்படுகிறது.
அசுஸ் விவோபுக் 15 (Asus Vivobook 15)
இந்த லேப்டாப் Intel Core i3-1215U, 8GB RAM, 512GB SSD, 15.6″ FHD டிஸ்ப்ளே என்ற அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த லேப்டாப் அமேசான் சம்மர் சேலில் ரூ.32, 990க்கு கிடைக்கிறது.