வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளிய அரட்டை.. App Store-ல் முதல் இடம் பிடித்து சாதனை!

Arattai App Beats WhatsApp | இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் இருந்த நிலையில், தற்போது சோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளிய அரட்டை.. App Store-ல் முதல் இடம் பிடித்து சாதனை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

29 Sep 2025 11:58 AM

 IST

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) இருந்த நிலையில், தற்போது அரட்டை செயலி (Arattai App) வாட்ஸ்அப் உள்ளிட்ட சில முக்கிய செயலிகளை முந்தியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மக்கள் மத்தியில் அரட்டி செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளதை இது காட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் அரட்டை செயலியின் வளர்ச்சி என்னவாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 வாட்ஸ்அப்புக்கு போட்டியாக களமிறங்கிய அரட்டை செய்லி

தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபொக்கு ஆகியவற்றுக்கு முக்கிய செயலியாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் இந்தியர்களால் அதிகம் பயன்படுத்தும் கருவிகளாக இருந்து வந்தன. இந்த நிலையில் தான் அரட்டை செயலி முதல் இடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சோஹோ (Zoho) நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த அரட்டை செயலி. ஆங்கிலத்தில் Chit Chat என்பதை தமிழில் அரட்டை என கூறப்படும் நிலையில், இந்த செயலிக்கு அரட்டை என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகளை போல தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க : இந்த லேப்டாப்பை ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்… தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தலாம்

சோஹோ நிறுவனம் எக்ஸ் பதிவு

அமைச்சரின் அறிவுரைக்கு பிறகு அதிகரித்த பயன்பாடு

அரட்டை செயலியை ஏற்கனவே ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியர்களை இந்திய செயலிகளை பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கினார். குறிப்பாக அரட்டை செயலி குறித்தும் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பரிந்துரையை தொடர்ந்து ஏராளமான மக்கள் அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் காரணமாக ஆப் ஸ்டோரில் (App Store) பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் அரட்டை செயலி நம்பர் 1 ஆக மாறியுள்ளது. அந்த பட்டியலில் திரட்ஸ் (Threads) இரண்டாவதாகவும், டெலிகிராம் (Telegram) மூன்றாவதாகவும், பேஸ்புக் (Facebook) நான்காவது இடத்திலும் மற்றும் வாட்ஸ்அப் (WahtsApp) ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.