இந்தியாவின் குழந்தைகளை தூங்க வைக்கும் ஏஐ ஸ்மார்ட் தொட்டில் – எப்படி செயல்படும்?
AI Parenting Tech : செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நபரான சாம் ஆல்ட்மேன் தனது குழந்தைக்கு பயன்படுத்தும் Cradlewise என்ற ஸ்மார்ட் படுக்கையை பரிந்துரை செய்துள்ளார். இந்த ஒரே ஒரு பதிவு, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு உலக அளவில் புகழை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
உலகின் ஏஐ (AI) துறைகளை பொறுத்தவரை முன்னணி நபராக பார்க்கப்படும் ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் (Sam Altman) இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான கிராட்ல்வைஸ் (Cradlewis) குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “நாங்கள் குழந்தைக்காக நிறைய தேவையற்ற பொருட்கள் வாங்கினோம். ஆனால் கிராடில்வைஸ் Cradlewise படுக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தன என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவரது பதிவைத் தொடர்ந்து இந்திய நிறுவனமான கிராடில்வைஸ் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறது. Cradlewise என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு ஸ்மார்ட் தொட்டில். இந்த ஸ்மார்ட் தொட்டிலை உருவாக்கியவர்கள் இந்தியர்களான ராதிகா பட்டில், மற்றும் அனுஷ்க் பந்தாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏஐ தொட்டில் எப்படி இயங்கும்?
கிராடில்வைஸ் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு ஸ்மார்ட் தொட்டில். இதன் முக்கிய சிறப்பம்சங்கள் :
-
குழந்தை விழித்துக்கொள்வதற்கான ஆரம்ப அறிகுறிகளை இது கவனிக்கிறது.
-
குழந்தை அசைவுகளை உணர்ந்து மெதுவாக ஆட்டம் கொடுத்து மீண்டும் தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது
-
இந்த தொட்டிலில் ஸ்மார்ட் கேமரா உள்பட பல தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன
-
இதனால் தாய்மார்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தை அளிக்க உதவுகிறது.
இதையும் படிக்க: 18 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு ஏஐ உதவியால் கர்ப்பமான பெண் – எப்படி சாத்தியமானது?
சாம் ஆல்ட்மேனின் எக்ஸ் பதிவு
we bought a lot of silly baby things that we haven’t needed
but definitely i recommend a cradlewise crib and a lot more burp rags than you think you could possibly need
— Sam Altman (@sama) April 13, 2025
சாம் ஆல்ட்மேன் பொதுவாக எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் பரிந்துரை செய்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் தொட்டிலை புகழ்ந்திருப்பது உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதனால் இந்திய தயாரிப்பான ஸ்மார்ட் தொட்டிலின் விற்பனை அதிகரித்திருக்கிறது.
இதையும் படிக்க: ChatGPT : சாட்ஜிபிடி உதவியுடன் ரூ.10.3 லட்சம் கடனை அடைத்த பெண்.. வியக்கும் நெட்டிசன்கள்!
இந்த நிலையில் கிராடில்வைஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராதிகா பட்டில் தனது எக்ஸ் பக்கத்தில், ஏஐ கடவுளான சாம் ஆல்ட்மேனின் நம்பிக்கையைப் பெறுவது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். இது எங்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது என்று உணர்ச்சி மிகுந்த பதிவை எழுதியுள்ளார்.
இந்த நிகழ்வு, செயற்கை நுண்ணறிவு குழந்தை பராமரிப்பு வரை எவ்வளவு பரவலாகச் சென்றிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இது போன்ற ஸ்மார்ட் சாதனங்கள், இனி ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் சாதாரண உபயோகப் பொருளாக மாறிவிடும் என்பது உறுதியாகிறது.