‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!

திருச்செந்தூர் கோவிலில் எச்சரிக்கையை மீறி இளைஞர்கள் சிலர் மீண்டும் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே, பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு நடனமாடியது சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து, கோவிலை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்த போதிலும், இளைஞர்கள் மீண்டும் ரீஸ்ஸ் எடுத்தது சர்ச்சையாகியுள்ளது.

‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!

திருச்செந்தூர் கோவிலில் ரீல்ஸ்

Updated On: 

23 Nov 2025 11:28 AM

 IST

தூத்துக்குடி, நவம்பர் 23: திருச்செந்தூர் (Thiruchendur) சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள். இது முருகப்பெருமானின் ஆறு வீடுகளில் ஒன்றாக மதிக்கப்படும் புனித தலம் ஆகும். அதோடு, இது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடற்கரையை ஒட்டிக் கட்டப்பட்ட ஒரே முருகன் கோவில். சூரபத்மனை வதம் செய்த பின், முருகன் தங்கி அருள்புரிந்த தலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் 6 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று கோவிலுக்கு வந்தபின், கோவில் வளாகத்திலேயே சினிமா பாடலுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்தனர். அதோடு, தாங்கள் எடுத்த அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய நிலையில், அந்த வீடியோ வேகமாக வைரலாகி பக்தர்களின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம்:

சமூக வலைதளங்களின் அபார வளர்ச்சியால், கோவில்கள் மற்றும் புனித தலங்களில் ‘ரீல்ஸ்’ எடுப்பது என்பது புதிய போக்காகிவிட்டது. பக்தி சூழலில் சினிமா பாடல்களுக்கு நடனமாடுதல், ப்ரேமிங் செய்து போட்டோஷூட் நடத்துதல் போன்ற செயல்கள், கோவிலின் மரபையும் புனிதத்தையும் குலைக்கும் வகையில் உள்ளதாக பக்தர்களும், நிர்வாகத்தினரும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஆன்மீக தலங்கள் தரிசனத்திற்கும், தியானத்திற்கும், அமைதிக்குமான இடங்களாக இருந்தாலும், இளம் தலைமுறையின் ‘சோசியல் மீடியா’ ஆசை சில சமயங்களில் இந்த சூழலை மாறுபடுத்துகிறது. இதனால், கோவில் வளாகங்களில் ரீல்ஸ் எடுப்பது சமூக ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் கடும் விமர்சனத்தை சந்திக்கிறது. பல கோவில்கள் இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத தலங்களில் மரியாதையும் ஒழுங்கும் பேணப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிகரித்து வர தொடங்கியுள்ளன.

இளம்பெண் எடுத்த ரீல்ஸ்:

அந்தவகையில், சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலில், ஒரு இளம்பெண் கோவில் வளாகத்திலேயே நடனமாடி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை கிளப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது, பாடல்களுக்கு நடனமாடுவது போன்ற செயல்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு, இந்தத் தடை வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல், அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டது. குறிப்பாக இந்த தடை குறித்து கோவிலை சுற்றி 15க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டன.

இதையும் படிக்க : எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

இளைஞர்கள் எடுத்த ரீல்ஸ்:

இந்நிலையில், இந்த விவகாரம் அடங்குவதற்குள், மீண்டும் 6 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சினிமா பாடலுக்கு நடனமாடி அதேபோன்று ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளதால், அதிருப்தி அதிகரித்துள்ளது. கோவிலின் புனிதத்தையும் ஆன்மிக சூழலையும் குலைக்கும் வகையில் இத்தகைய நடன வீடியோக்களை எடுப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்வாறு கோவில் மரியாதைக்கு முரணாக நடக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி