சாதி மாறி மகள் திருமணம்.. மாப்பிள்ளையை கொன்ற மாமனார்!
Dindigul Crime News: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் சாதி மறுப்பு திருமணம் செய்த ராமச்சந்திரன், பெண்ணின் தந்தையால் வெட்டிக் கொல்லப்பட்டார். காதல் விவகாரம் இரு வீட்டிலும் எதிர்ப்பைச் சந்தித்த நிலையில், பதிவு திருமணம் செய்துள்ளனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன்
திண்டுக்கல், அக்டோபர் 14: திண்டுக்கல் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள ராமநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். 24 வயதான இவர் பால் கறவை தொழில் செய்து வருகிறார். இவர் கணபதி பட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவரது மகள் ஆrத்தியை சந்தித்துள்ளார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். முதலில் இருவரும் நட்பாக பழகிய நிலையில் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஒருகட்டத்தில் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் ராமசந்திரன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆர்த்தி குடும்பம் அவரது காதலை கடுமையாக எதிர்த்துள்ளது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். எனினும் வேறு சாதியைச் சேர்ந்தவரை தனது மகள் திருமணம் செய்து விட்டாளே என்ற ஆத்திரத்தில் சந்திரனின் குடும்பம் இருந்துள்ளது.
Also Read: காதலை நிரூபிக்க இளைஞர் செய்த செயல்.. பறிபோன உயிர்.. நடந்தது என்ன?
மேலும் இரண்டு முறை தம்பதியினருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 13) வழக்கம் போல காலையில் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்துள்ள பெரியார் பாசன கால்வாய் காலத்தில் அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராமச்சந்திரனை எதிரே ஆர்த்தியின் தந்தையான சந்திரன் வழிமறித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சந்திரன் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராமச்சந்திரனின் கைதுண்டான நிலையில் படுகாயம் அடைந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Also Read: தந்தை செய்த கொடூரம்.. 3 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை.. தஞ்சையில் பயங்கரம்!
இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாதி விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பதால் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ராமச்சந்திரனை கொலை செய்த சந்திரன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்தார். ஆனால் அவர் மட்டும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்க முடியாது என்றும் இது தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் ராமச்சந்திரன் பெற்றோர், உறவினர்கள் ஆண்டிப்பட்டி – வத்தலகுண்டு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு இணைந்து சென்ற காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.