பிறந்தநாளில் கொடூரம்.. இளைஞரை கொலை செய்த நண்பர்கள்.. வட சென்னையில் பயங்கரம்!
Chennai Youth Murder : வட சென்னையில் இளைஞர் அவரது பிறந்தநாளில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேக் வெட்டி கொண்டாட அழைத்து சென்ற நண்பர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரிப்படம்
சென்னை, ஜூலை 15 : சென்னையில் பிறந்தாள் கொண்டாட்டத்திற்கு சென்ற இளைஞர், கொடூரமாக கொலை (Chennai Youth Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேட் வெட்டி கொண்டா நண்பர்கள் இளைஞரை அழைத்து சென்ற நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (19). இவர் அதே பகுதியில் மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். 2025 ஜூலை 13ஆம் தேதி இளைஞர் சங்கருக்கு பிறந்தநாள். இதனால், நண்பர்களின் அழைப்பின்பேரில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கொடுங்கையூர் கருணாநிதி சாலைக்கு சென்றிருக்கிறார். கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வரன், பாஸ்கர், வசந்த், பில்கேட்ஸ் ஆகியோருக்கு அழைத்துள்ளனர். கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் சங்கரை அழைத்துள்ளனர்.
அப்போது, அங்கு சென்ற சங்கரிடம் நண்பர்கள் பிறந்தநாளையொட்டி, மது வாங்கி தர கூறியிருக்கின்றனர். அதன்படி, அவரும் மது வாங்கி கொடுத்து, கொடுங்கையூர் கைலாசம் தெரு பகுதியில் உள்ள முட்புதரில் அமர்ந்து சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கொண்ட சங்கரை அரிவாளால் சரமரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
Also Read : கொலையில் முடிந்த பிராங்க் கால்.. இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. மதுரையில் அதிர்ச்சி!
இளைஞரை கொலை செய்த நண்பர்கள்
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர், சங்கரை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடப்ரகா 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை லிங்கேஷ், நிதின், ஸ்டீபன் ராஜ் மற்றும் விஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் போது ஸ்டீபன் ராஜுடன் சண்டையில் ஈடுபட்டதால் இந்த கொலை நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
Also Read : பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!
மேலும், சங்கரை தெருவில் ஓடஓட கும்பல் வெட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த கொலையில் சங்கரின் நண்பர்களுக்கு பங்கு இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வட சென்னையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.