யாருப்பா நீ? பாம்பு பிடிக்க முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. இந்த தவறை பண்ணாதீங்க!
Salem Crime News : சேலம் மாவட்டத்தில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார். விளையாட்டாக நல்ல பாம்பை பிடிக்க முயற்சித்த போது, இளைஞரை பாம்பு கடித்துள்ளது. இதில் மயக்கமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இளைஞர்
சேலம், ஆகஸ்ட் 28 : சேலம் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்றபோது, பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடி சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பாம்பு கடியால் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, விளையாட்டாக நல்லபாம்பை பிடிக்க முயன்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜமுருகன் (21). இவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், ராஜமுருகனை அவர நண்பர்கள் பாம்பு பிடிக்க அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர், நண்பர்களுடன் அங்கு சென்ற ராஜமுருகன், நல்ல பாம்பை பிடிக்க முயற்சித்துள்ளார். முதலில் பாம்பின் தலையை கட்டையால் அடிக்க முயற்சித்தார். அப்போது, பாம்பு அவரின் கைவிரலில் கடித்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், ராஜமுருகன் கைவிரலில் துணியை கட்டி, மீண்டும் பாம்பை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. உடனே மயக்க நிலைக்கு சென்றிருக்கிறார். இதனை அடுத்து, அங்கிருந்த நண்பர்கள் ராஜமுருகனை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Also Read : சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் கல்லை போட்டு கொலை!
பாம்பு பிடிக்க முயன்ற இளைஞர் பலி
அதற்குள் அவரது உடல் முழுவதும் விஷம் பரவி உள்ளது. ராஜமுருகனை பரிசோதனை மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக நல்லபாம்பை பிடிக்க முயன்ற இளைஞரை பாம்பு கடித்ததில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, யாரும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.
வீட்டிற்குள் பாம்பு இருந்தால், பாம்புபிடி வீரர்களை அழைத்து அதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் கூட, கடலூர் மாவட்டத்தில் ஷூவில் இருந்த பாம்பு கடித்து பள்ளி மாணவர் படுகாயம் அடைந்தார். ஷூவை அணியும் போது, சிறுவன் அதனை தட்டாமல் போட்டதால், பாம்பு கடித்துள்ளது.
Also Read : சித்தியிடம் தொடர்ந்து தகராறு.. அடித்துக்கொன்ற தந்தை.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்!
தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுவன் 12 வயதான கவுசிக் என தெரியவந்துள்ளது. சிறுவன் வீட்டு வாசலில் இருந்த ஷூவில் பாம்பு இருந்தது தெரியவந்தது. சிறுவன் அதை கவனிக்காமல் பேட்டதால், பாம்பு கடித்துள்ளது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.