திருமண நிகழ்ச்சியில் சோகம்.. நடனமாடும் போதே பிரிந்த உயிர்… செங்கல்பட்டில் அதிர்ச்சி

Woman Dies Heart Attack Chengalpattu : செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்ச்சியில் சோகம்..  நடனமாடும் போதே பிரிந்த உயிர்... செங்கல்பட்டில் அதிர்ச்சி

உயிரிழந்த பெண்

Updated On: 

20 Aug 2025 13:18 PM

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 20 :  செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடமாடிக் கொண்டிருந்தபோதே, பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலங்களில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர்குறிப்பாக, கொரோனா காலத்திற்கு பிறகு, மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், புகைப்பிடிப்பது, மது பானம் அருந்துவது, தீவிர உடற்பயிற்சி போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.  இந்த நிலையில் தான், செங்கல்பட்டில் அதிர்ச்சியூட்டும்  சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

அதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடமாடிக் கொண்டிருந்தபோதே, பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஞானம். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜீவா. இவர்கள் இரண்டு பேரும் 2025 ஆகஸ்ட் 19ஆம் தேதியான நேற்று இரவு மாமல்லபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கு பாடகர் வேல்முருகன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெண் ஜீவா தனது குடும்பத்தினருடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.

Also Read : விழுப்புரத்தில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் அடித்து கொலை.. அதிர்ச்சி பின்னணி!

திருமண நிகழ்ச்சியில் சோகம்

சந்தோஷமாக நடமாடிக் கொண்டிருக்கும்போதே, அவர் திடீரென மயக்கமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே பெண் ஜீவாவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஜீவா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Also Read : பல்கலைகழகத்தில் பர்தா அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர்.. கைது செய்த போலீஸ்.. ஷாக் காரணம்

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், பெண் ஜீவா மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து, அப்படியே மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கொண்டு சென்றனர். நடனமாடிக் கொண்டிருக்கும்போதே பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் கூட, புனேவில் 37 வயதான நபர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே, மாரடைப்பால் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மிலிந்த் குல்கர்னி என்பது தெரியவந்தது.