Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுற்றுலாப்பயணிகளே உஷார்… ஆழியார் அணையில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்

Forest Department Warning: பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடும் வெயிலால் ஆழியார் அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் நீலகிரி வனத்திலிருந்து யானைகள் தண்ணீர் தேடி வெளியே வருகின்றன. யானைகளை படம் எடுக்கவோ, உணவு கொடுக்கவோ கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிமீறினால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளே உஷார்… ஆழியார் அணையில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்
ஆழியார் அணையில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 24 May 2025 07:08 AM

கோவை மே 24: பொள்ளாச்சி (Pollachi) அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் (Anaimalai Tiger Reserve) உள்ள பகுதியில் கடும் வெயிலால் ஆழியார் அணையின் நீர்மட்டம் (Water level of Aliyar Dam) மிகவும் குறைந்து விட்டது. இதனால், நீலகிரி வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் (Wild elephants) தண்ணீர் தேடி வெளியே வந்து அணை பகுதியில் சுற்றித் திரிகின்றன. விடுமுறை காரணமாக ஆழியார்-வால்பாறை சாலையில் சுற்றுலாப் பயணிகள் முகாமிட்டு இருக்க, கடந்த சில நாட்களாக யானைகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், சிலர் யானைகளை படம் எடுத்து ரசித்து வருகின்றனர். வனத்துறை, இது ஆபத்தான செயலாக இருப்பதால் யானைகள் அருகே செல்பி எடுக்கவோ, உணவு கொடுக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே ஆழியாரில் காட்டு யானைகள் சுழலும் அச்சம்

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

ஆழியாரில் வறட்சியால் நீர் வட்டம் பாதிப்பு

தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஆழியார் அணையில் நீர் மட்டம் குறைந்து பாறைகள் வெளிப்படுகின்றன. இதனால், நீலகிரி வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள், தண்ணீர் மற்றும் உணவுக்காக வனத்தை விட்டு வெளியே வந்து, ஆழியார் அணை அருகே சுற்றித் திரிகின்றன.

சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

ஆழியார்-வால்பாறை சாலையில் தொடர்ந்து விடுமுறைகள் வருவதால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் முகாமிட்டு இருக்கின்றனர். இதே வேளையில், சில நாட்களாக பொதுமக்கள் மீது காட்டு யானைகள் தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தப்படுகிறது.

யானைகளை புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

ஆழியார் பகுதியில் சுழலும் காட்டு யானைகளை அங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ரசித்து, புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர். இது பாதுகாப்பு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் யானைகள் சுற்றுலாப்பயணிகளை தாக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

வனத்துறை எச்சரிக்கை

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது “ஆழியார் பகுதியில் காட்டு யானைகள் சுழலும் சூழ்நிலையில், சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வனவிலங்குகளை பார்த்ததும் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க கூடாது.

வனவிலங்குகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதும், வாகனங்களை சாலையில் நிறுத்துவதும் தவிர்க்க வேண்டும். இதனை மீறுவோர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.

மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் சோகம்.. கணவர் மாரடைப்பால் பலி
மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் சோகம்.. கணவர் மாரடைப்பால் பலி...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு...
மைசூர் சாண்டல் விளம்பரத்துக்கு இந்தி நடிகை தமன்னாவா?
மைசூர் சாண்டல் விளம்பரத்துக்கு இந்தி நடிகை தமன்னாவா?...
ஓடும் ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி சம்பவம்!
ஓடும் ஆட்டோவில் மாணவிக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி சம்பவம்!...
வேலூரில் விட்டு விலகிய காதலியை அடித்தே கொன்ற காதலன்..!
வேலூரில் விட்டு விலகிய காதலியை அடித்தே கொன்ற காதலன்..!...
இந்தியா உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளோம் - பாக்!
இந்தியா உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளோம் - பாக்!...
மூதாட்டி கொலை வழக்கு.. இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்
மூதாட்டி கொலை வழக்கு.. இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்...
நீங்க யாரு என கேட்ட விராட் கோலி முன் சிம்பு எடுத்த சபதம்!
நீங்க யாரு என கேட்ட விராட் கோலி முன் சிம்பு எடுத்த சபதம்!...
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்? - சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்? - சுகாதாரத்துறை விளக்கம்!...
ஏற்காடு மலர் கண்காட்சி... கட்டணம் எவ்வளவு? முழு விவரம்
ஏற்காடு மலர் கண்காட்சி... கட்டணம் எவ்வளவு? முழு விவரம்...
ஜிவி பிரகாஷின் 'இம்மார்டல்' பட ஷூட்டிங் போட்டோ வைரல்!
ஜிவி பிரகாஷின் 'இம்மார்டல்' பட ஷூட்டிங் போட்டோ வைரல்!...