திமுக கூட்டணி உடைக்க முனைப்புடன் உள்ளனர்.. இது அற்ப தனமான ஒன்று – திருமாவளவன்..
Thirumavalavan: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு நாள் ஒன்று முதல் விசிக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க சிலர் முனைப்புடன் செயல்பட்டு வருவது அற்ப தனமான ஒன்று என தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
மதுரை, ஆகஸ்ட் 15, 2025: தூய்மை பணியாளர்கள் பிரச்சினையை முன்வைத்து திமுக கூட்டணியை உடைக்க சிலர் எண்ணுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரியும், தனியார் மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் கடந்த 2025 ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 13 நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசு தரப்பில் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தூய்மை பணியாளர்களின் பிரச்சினைகளை நாள் ஒன்று முதல் விசிக தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறது.
ஜி.எஸ்.டி அவரி குறைப்பு வரவேற்கத்தக்கது:
ஜிஎஸ்டி வரியை குறைப்பதாக பிரதமர் மோடி கூறி இருப்பது மகிழ்ச்சி. ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது தேர்தலுக்கான யுத்தியாக பாஜக கையெடுத்திருந்தாலும் மக்களுக்கு அது நல்லது செய்யும் என்றால் அது வரவேற்கக் கூடியது தான். ஆனால் ஜிஎஸ்டி வரியை முழுமையாக மத்திய அரசு கைவிட வேண்டும். சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பாராட்டியது ஏற்புடையது அல்ல. மத்திய அரசால் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகத்தான் மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும் பதற்றம் நிலைமை வருகிறது.
மேலும் படிக்க: கூட்டணியை விட்டு வெளியேற முடியுமா? திருமாவளவனுக்கு சவால் விட்ட தமிழிசை சௌந்தரராஜன்!
தனியார் மயமாக்கும் அரசின் முடிவை கை விட வேண்டும்:
தூய்மை பணியாளர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் நாள் ஒன்று முதல் குரல் கொடுத்திருக்கிறோம். மாநில மற்றும் மத்திய அரசு துறைகள் தனியார் மயமாக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. அரசு துறைகள் தனியார் மயமாக்கும் முயற்சியை நிச்சயமாக கைவிட வேண்டும். இதனை தமிழ்நாடு முதலமைச்சரிடமும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். தனியார் மயமாக்கும் முயற்சியை அரசு உடனடியாக கைப்பட வேண்டும் என மீண்டும் ஒருமுறை அரசுக்கு வலியுறுத்துகிறேன்.
மேலும் படிக்க: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.. வாகன பேரணியை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி..
திமுக கூட்டணி உடைக்க முனைப்புடன் உள்ளனர்:
தூய்மை பணியாளர்களை தனியார்மயமாக்குவது விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சென்னையில் இருக்கக்கூடிய 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியார் மையம் ஆக்கிவிட்டது மீதம் இருக்கக்கூடிய நான்கு மண்டலங்களில் தற்போது இரண்டு மண்டலங்களை அரசு தனியார் மயமாக பார்க்கிறது. இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் பிரச்சனையில் அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலர் நோக்கமாக வைத்துள்ளனர் இதை வைத்து அரசியல் செய்வது ஒரு அற்பத் தனமான நடவடிக்கையாகும்” என பேசி உள்ளார்