Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரயில் பயணிகளே கவனியுங்கள்… திருச்சி வழியே செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்…

Trichy train cancellations: திருச்சி-சேலம் ரயில்வே கோட்டங்களில் 2025 மே 5, 7, 12 தேதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் கும்பகோணம் வரையே இயங்கும். மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் கும்பகோணத்திலிருந்து புறப்படும். சோழன், ஹம்சபர் உள்ளிட்ட பல ரயில்களில் தாமதம் ஏற்படும். பயணிகள் முன்கூட்டியே தகவலறிந்து பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

ரயில் பயணிகளே கவனியுங்கள்… திருச்சி வழியே செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்…
திருச்சி வழியே செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 03 May 2025 10:00 AM

திருச்சி மே 03: திருச்சி மற்றும் சேலம் ரெயில்வே (Trichy -Salem Railway Route) கோட்டங்களில் பராமரிப்பு பணியால், 2025 மே 5, 7, 12 ஆகிய நாட்களில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும்; மயிலாடுதுறை-செங்கோட்டை ரெயில் கும்பகோணத்தில் இருந்து புறப்படும். சோழன், ஹம்சபர், லோக்மானியதிலக், நாகர்கோவில் ரெயில்கள் சில நாள்களில் தாமதமாக இயக்கப்படும். சென்னை-குருவாயூர் (Chennai – Guruvayur) ரெயில்கள் மே 5 முதல் 10 வரை 15-30 நிமிடங்கள் தாமதம் அடையும். ஈரோடு-திருச்சி மற்றும் பாலக்காடு-திருச்சி ரெயில்கள் கரூர் வரை மட்டுமே செல்லும். மாற்றங்கள் குறித்து பயணிகள் முன்னதாக தகவல் அறிந்து பயணத்திட்டமிட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருச்சி ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில்கள் குறைக்கப்பட்டு, சில தாமதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மற்றும் சேலம் ரெயில்வே கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ரெயில்வே நிர்வாகம் சில ரெயில் சேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்த மேலதிக விபரங்கள்:

மயிலாடுதுறை ரெயில்கள் மாற்றம்

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்: 56700)
காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், 2025 மே 5, 7, 12 ஆகிய தினங்களில் மயிலாடுதுறைக்கு செல்லாது. இது கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு ரெயில் (எண்: 16847)
பகல் 12.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மே 5, 7, 12 ஆகிய நாட்களில் மயிலாடுதுறையிலிருந்து புறப்படாது. அதற்குப் பதிலாக கும்பகோணத்தில் இருந்து 12.42 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும்.

சோழன் அதிவேக மற்றும் பிற விரைவுரெயில்கள் தாமதம்

திருச்சி – சென்னை சோழன் அதிவேக விரைவு ரெயில் (எண்: 22676)
2025 மே 5, 7, 12 ஆகிய நாட்களில் 10 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

லோக்மானியதிலக் – மதுரை அதிவேக ரெயில் (எண்: 22101)
2025 மே 7 அன்று 30 நிமிடங்கள் தாமதம் ஏற்படும்.

ஹம்சபர் அதிவேக ரெயில் (எண்: 20481)
2025 மே 7 அன்று 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

கச்சிக்குடா – நாகர்கோவில் சிறப்பு ரெயில் (எண்: 07435)
2025 மே 9 அன்று 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

சென்னை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் சேவை மாற்றம்

சென்னை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்: 16127)
2025 மே 5 முதல் 10 வரை தினமும் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் (எண்: 16128)
2025 மே 6, 20, 27 ஆகிய நாட்களில் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

ஈரோடு, பாலக்காடு ரெயில்கள் சேவையில் குறைப்பு
ஈரோடு – திருச்சி பயணிகள் ரெயில் (எண்: 56106)
2025 மே 6, 8 ஆகிய நாட்களில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்: 16844)
2025 மே 6, 8, 10 ஆகிய நாட்களில் திருச்சிக்குப் பதிலாக கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சி – பாலக்காடு ரெயில்களில் மாற்றம்

திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843)
2025 மே 6, 8, 10 ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து புறப்படாது. மாறாக, கரூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு பாலக்காடு புறப்படும்.

பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்: 16844)
மே 03 இன்று முதல் மே 9 வரை, வழக்கமான கோவை சந்திப்பு, வடகோவை, பீளமேடு வழியாக செல்லாது. அதன் பதிலாக போத்தனூர் சந்திப்பில் இருந்து இருங்கூர் வழியாக இயக்கப்படும்.

இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ளார். பயணிகளுக்கு ஏற்புடைய திட்டமிடல் மேற்கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு...
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?...
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!...
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்...
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!...
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!...