ஏரிகளில் மீன்களுக்கு டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்: காரணம் இதுதான்…
Krishnagiri vegetables: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மற்றும் போச்சம்பள்ளி பகுதிகளில் காய்கறி விளைச்சல் அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் டன் கணக்கில் காய்கறிகளை ஏரிகளில் கொட்டி அழிக்கின்றனர். இந்த விலை போகாத காய்கறிகளை மீன் குத்தகைதாரர்கள் வாங்கி மீன்களுக்கு உணவாகப் பயன்படுத்துகின்றனர்.

ஏரிகளில் டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்
கிருஷ்ணகிரி மே 09: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், (Krishnagiri) போச்சம்பள்ளி பகுதிகளில் கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் (Vegetables Price Loss) மற்றும் பூக்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சமீபத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. விலை இல்லாமல் தேங்கிய காய்கறிகளை விவசாயிகள் ஏரிகளில் கொட்டி அழிக்கின்றனர். இதனை அறிந்த மீன் குத்தகைதாரர்கள், காய்கறிகளை மொத்தமாக வாங்கி மீன்களுக்கு உணவாக பயன்படுத்தி வருகின்றனர். இழப்பால் விவசாயிகள் மன வேதனையில் இருக்கும் நிலையில், விற்பனைக்கு மாற்றுவழி இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏரிகளில் மீன்களுக்கு டன் கணக்கில் கொட்டப்படும் காய்கறிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் சுற்றுவட்டாரங்களில் கோஸ், கேரட், பீட்ரூட், தக்காளி, கத்திரி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பூக்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை தமிழகம் மட்டுமன்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விலை வீழ்ச்சி – விவசாயிகள் அவலம்
இப்போது, அதிக அளவில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. குறிப்பாக பீட்ரூட், கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் விலை இழந்துள்ளன. மேலும், முருங்கைக்காய் சாகுபடி பெரிய அளவில் நடைபெற்றுவருகிறது. கொத்தமல்லி, புதினா போன்ற கீரைகள் சந்தையில் கவனிக்கப்படவில்லை. விலை கிடைக்காத காய்கறிகளை விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலையில்லா காய்கறிகள் ஏரிகளில் வீச்சு
சூளகிரி பகுதியில் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத காய்கறிகளை டிராக்டரில் ஏற்றி, அருகிலுள்ள ஏரிகளில் கொட்டி அழிக்கின்றனர். இந்த தகவலை அறிந்த மீன் குத்தகைதாரர்கள், ஓசூர் பகுதிக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி, ஏரிகளில் உள்ள மீன்களுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.
மீன்களுக்கு இயற்கை உணவு
மீன் குத்தகைதாரர்கள் கூறுகையில், “ஏரிகளில் வளரும் மீன்களுக்கு இயற்கையான உணவுகளை வழங்க முயல்கிறோம். தற்போது, கிருஷ்ணகிரியில் காய்கறிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதனால் கோஸ், குடைமிளகாய், பூசணி, வெண்பூசணி போன்றவற்றை வாங்கி, மீன்களுக்கு உணவாக வழங்குகிறோம்,” என்றனர்.
விவசாயிகளின் வேதனை
விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் முதல் காய்கறிகள் விலை கடுமையாக வீழ்ந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; விலை போகாத காய்கறிகளை அழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மீன் குத்தகைதாரர்கள், மலிவான காய்கறிகளை மொத்தமாக வாங்கி ஏரியில் உள்ள மீன்களுக்கு இயற்கை உணவாக வழங்கி வருகின்றனர். “கடந்த மாதத்திலிருந்து காய்கறிகளுக்கு விலை கிடைக்காமல் இருக்கிறது. நஷ்டமடைந்தாலும் விற்பனைக்கு வழியின்றி இருக்கிறோம். விலை போகவில்லை என்பதால் அழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது,” என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.