Tiruvallur Train Fire: 17 மணிநேரத்திற்கு பிறகு! ஒரு வழி தடத்தில் தொடங்கிய ரயில் சேவை.. பயணிகள் மகிழ்ச்சி!
Tiruvallur Railway Accident: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். 17 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

ரயில் சேவை தொடக்கம்
திருவள்ளூர், ஜூலை 14: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று அதாவது 2025 ஜூலை 13ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் டீசல் ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகளில் ஒன்று தடம் புரண்டு, தீ விபத்து (Tiruvallur Fire Accident) ஏற்பட்டது. இதனால், பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டு நாள் முழுவதும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தநிலையில், திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட 17 மணி நேரத்திற்கு பின்பு, மீண்டும் ரயில் சேவைகள் இயங்க தொடங்கியது. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் குறைந்த அளவிலேயே தெற்கு ரயில்வே (Southern Railway) இயக்கப்பட்டு வருவதால் போதிய ரயில் சேவைகள் இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றன.
என்ன நடந்தது..?
சென்னை துறைமுகத்திலிருந்து வாலாஜா சாலை சைடிங்கிற்கு டீசல் நிரப்பப்பட்ட ரயில் சென்று கொண்டிருந்தது. 2025 ஜூலை 13ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ரயில் பெட்டிகளில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெட்டிகளில் தீ பிடித்தது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் 10 மணிநேரம் போராடியதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்புள்ள டீசல் முழுவதும் நாசமானது.
ALSO READ: மிஸ் டார்க் குயின்..! மாடல் சான் ரேச்சல் பண நஷ்டத்தால் தற்கொலை..!
திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள இருளர் காலனி மற்றும் பெரியகுப்பத்தை சேர்ந்த கிட்டத்தட்ட 500 பேர், விபத்து நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதி நாள் முழுவதும் புகை மண்டலத்தில் மூழ்கியது. இதையடுத்து, மக்கள் அருகிலுள்ள இடத்திற்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மீண்டும் ரயில் சேவை:
திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்ட 17 மணி நேரத்திற்கு பின், ஒரு வழித் தடத்தில் மட்டும் ரயில் சேவை தொடங்கியது. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை புறநகர் ரயில் நிலையத்திற்கு செல்லும் மின்சார ரயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று அதாவது 2025 ஜூலை 14ம் தேதி மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று, விரைவில் ரயில் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை:
A fuel-laden railway tanker caught fire near Tiruvallur.Thick black smoke and intense flames engulfed the area, disrupting train services.Firefighters are on the scene, & officials are investigating the cause.
#TrainFire #BreakingNews #ChennaiUpdates @NewIndianXpress@xpresstn pic.twitter.com/Pc3jwtJJDd— Ashwin Prasath (@ashwinacharya05) July 13, 2025
தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டபோது, “விபத்து நடந்த சில நிமிடங்களில் மங்களூர் எக்ஸ்பிரஸ் அந்த வழித்தடத்தை கடந்து செல்ல இருந்தது. ஆனால், ரயில்வே அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏகாட்டூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். தமிழ்நாடு அரசு பயணிகளை சாலை வழியாக கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்தது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.