ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. நெல்லை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..

Tirunelveli: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என், ரவியிடம் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்த மாணவியாள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஒருவரிடம் இருந்து ஏன் பெற வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. நெல்லை பல்கலைக்கழகத்தில் பரபரப்பு..

மாணவி ஜூன் ஜோசப்

Published: 

13 Aug 2025 17:41 PM

நெல்லை, ஆகஸ்ட் 13, 2025: திருநெல்வேலியில் இருக்கக்கூடிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று அதாவது ஆகஸ்ட் 13 2025 அன்று பட்டமளிப்பு விழாவானது நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். அப்போது இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற மாணவி ஒருவர் ஆளுநரிடமிருந்து பட்டத்தை பெற மறுத்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய துணைவேந்தர் சந்திரசேகர் அவரிடம் பட்டத்தை பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அதன் 32 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, துணைவேந்தர் சந்திரசேகர், உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில் 650 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர்.

ஆளுநரிடம் இருந்து பட்டத்தை பெற மறுத்த மாணவி:

இந்த நிகழ்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற மாணவி ஜீன் ஜோசப் என்பவர் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து தனது பட்டத்தை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து அருகில் இருக்கக்கூடிய துணைவேந்தர் சந்திரசேகரரிடம் தனது பட்டத்தை கொடுத்து வாழ்த்து பெற்றார். அதேபோல் ஆளுநர் ரவி தனது அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனையும் மறுப்பு தெரிவித்து துணைவேந்தர் அருகில் இருந்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: திரையுலகில் 50 ஆண்டுகள்…. ரஜினிகாந்த்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஆளுநரிடமிருந்து ஏன் பட்டத்தை பெற வேண்டும்?

இது தொடர்பாக மாணவி ஜீன் ஜோசப் பேசுகையில், “ தமிழ்நாட்டுக்கு எதிராக இருப்பவரிடம் இருந்து எதற்காக பட்டம் பெற வேண்டும். நான் திராவிட மாடல் சிந்தனையுடையவள். தமிழகத்திற்கு எதிராக செயல்படுபவரிடம் பட்டம் பெற விருப்பமில்லை. துணைவேந்தர் சந்திரசேகரன் பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். எனவே எனது முனைவர் பட்டத்தை அவரிடம் பெறுவது சரியானது என தோன்றியது. ஆளுநரிடம் இருந்து ஏன் பட்டம் பெற வேண்டும். தமிழகத்தில் பட்டம் கொடுப்பதற்கு வேறு யாரும் இல்லையா” என பேசி இருந்தார்