வரலாற்று சின்னம்.. அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்.. டெண்டர் அறிவிப்பு!

Old Pamban Railway Bridge : ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தூக்கு பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. நூற்றாண்டுகள் கடந்த இந்த பாலத்தை அகற்றுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரலாற்று சின்னம்.. அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்.. டெண்டர் அறிவிப்பு!

Old Pamban Bridge

Updated On: 

24 Aug 2025 09:45 AM

ராமேஸ்வரம், ஆகஸ்ட் 24 :  இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பழைய ரயில்வே பாலத்தை (Old Pamban Bridge) அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. 110 ஆண்டுகள் பழமையான நிலையில், தற்போது இடிக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பழைய பாலத்தை அகற்றும் பணிகளுக்காக மொத்த தொகையாக ரூ.2.81 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இதற்கு முக்கிய காரணம் பாம்பன் பழைய ரயில் பாலம். ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகளே ஈர்ப்பதோடு, பொறியியல் திறமையின் சிறப்பையும் பிரதிபலிக்கும் சின்னமாக ராமேஸ்வரம் பாம்பன் பாலம் உள்ளது.

மண்டபம்ராமேஸ்வரம் பகுதியை இணைக்கும் வகையில் 1914ஆம் அண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் முதல் ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்தியாவிலேயே முதல் கடல் பாலமாக பாம்பன் பாலம் திகழ்கிறது. இந்த பாலம் கடலுக்கு நடுவில் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த பாலம் கடுமையான புயல்களை எதிர்கொண்டு தனது வலிமையும் பொறியியல் திறனையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

Also Read : ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. சிறப்பு மலை ரயில் இயக்கம்.. டைமிங் இதுதான்!

அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்


சுமார் 2.3 கி.மீ நீளம் கொண்ட இந்த ரயில் பாலம், இந்தியாவிலேயே மிக நீளமான பாலாமாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 12.5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பாலம் 143 தூண்களை கொண்டுள்ளது.   இந்த பாலம் நூற்றாண்டு கடந்த நிலையில், இந்த பாலம் நூற்றாண்டுகள் கடந்த நிலையில், புதிய பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பணிகளை 2019ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், 2025 ஏப்ரல் மாதம் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டது.

இந்த நிலையில், பழைய பாலத்தை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பாம்பன் பழைய ரயில்வே பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாம்பன் பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது

Also Read : அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு என்னாச்சு? திருவள்ளூரில் பரபரப்பு

பாம்பன் பாலத்தின் ஸ்கெர்சர்ஸ்ரோலிங் மற்றும லிப்ட் ஸ்பேன் உள்ளிட்டவைகளை அகற்றுவது தொடர்பான பணிகளுக்காக மொத்த தொகையாக ரூ.2.81 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு டெண்டர் கோருவோர் ரூ.5.62 கோடி முன்வைப்புத் தொகை செலுத்தவும் கோரப்பட்டு இருக்கிறது. எனவே, நான்கு மாதங்களில் பழைய பாலத்தில் அகற்றும் பணிகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.