Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“விஜய் எதிரி கிடையாது” ஓப்பனாக சொன்ன தேமுதிக.. மாறும் கூட்டணி கணக்கு?

DMDK TVK Alliance : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனக்கு எதிரி இல்லை என்றும் அண்ணன் தான் என்றும் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். மேலும், விஜய்க்கு 50 வயது. தனக்கு 30 வயது. எனவே, அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்றும் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

“விஜய் எதிரி கிடையாது” ஓப்பனாக சொன்ன தேமுதிக.. மாறும் கூட்டணி கணக்கு?
விஜய் - விஜய பிரபாகரன்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 15 May 2025 13:04 PM

சென்னை, மே 15 : தமிழக வெற்றிக் கழகத்துடன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் குறித்து அக்கட்சி இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். மேலும், கூட்டணி குறித்து பேசியுள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஓராண்டே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அண்மையில் பாஜக அதிமுக கூட்டணி வைத்தது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

“விஜய் எதிரி கிடையாது”

2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சேரும் என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்து அக்கட்சி சார்பில் எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்திளார்களை சந்தித்த விஜய பிரபாகரன், “நான் விஜய்யை ஓரிரு முறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். கடைசியாக அவரது கோட் திரைப்படம் வெளியான பிறகு எங்கள் வீட்டில் சந்தித்தேன். ஆனால் நாங்கள் எந்த அரசியல் விவாதங்களையோ அல்லது கூட்டணி பேச்சுவார்த்தைகளையோ நடத்தவில்லை.

எனக்கு 33 வயது, விஜய்க்கு 50 வயது. என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள். அவர் வயதில் சீனியர். ஆனால், அரசியலில் நான் அவரை விட சீனியர் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதை நான் பெருமையான உணர்கிறேன். சினிமாவைப் பொறுத்தவரை, விஜய் ஒரு அனுபவம் வாய்ந்தவர். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரது ரசிர்களாக உள்ளனர்.

மாறும் கூட்டணி கணக்கு?

தந்தை கேப்டன் விஜயகாந்துக்கு இருந்தது போல,தற்போது, இளைஞர் பலம் விஜய்க்கு உள்ளது. விஜய் ஒன்றும் எனக்கு எதிரி கிடையாது. அண்ணன் தான். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்றார்.  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, விஜய பிரபாகரன் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார். அண்மையில் கூட அவருக்கு கட்சியில் இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருந்த அவருக்கு,  அண்மையில் தான் பதவி வழங்கப்பட்டது. இன்னும் தேர்தலுக்கு ஓராண்டே இருப்பதால், கட்சியை பலப்படுத்த  தேமுதிக செயல்பட்டு வருகிறது. மேலும், கூட்டணி குறித்தும் பேசி வருகிறது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதனால், வரும் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி என்பது கேள்விக்குறிதான். எனவே,  தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.