தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. பிரதீப் ஜான் கொடுத்த ஹிண்ட்.. எப்போது தெரியுமா?
North East Monsoon: அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக் காலங்களில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு பகுதிகளின் தாக்கத்தால் மழை பெய்யும்.

கோப்பு புகைப்படம்
வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 10, 2025: வரவிருக்கும் 2025 அக்டோபர் 17 முதல் 19ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தமிழ்நாட்டு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். பொதுவாக, பருவமழை என்பது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது — தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை. இதில் தென்மேற்கு பருவமழைக் காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். அதேபோல், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நீடிக்கும்.
இந்த பருவமழைக் காலங்களில், இந்தியா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களுக்கு தேவையான மழைப்பொழிவு கிடைக்கிறது. குறிப்பாக, வடகிழக்கு பருவமழையை விட தென்மேற்கு பருவமழைதான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு நீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
மேலும் படிக்க: மழைக்கு ரெடியா? அடுத்த 7 நாட்களுக்கு தொடரும் கனமழை.. படிப்படியாக குறையும் வெப்பநிலை..
முன்கூட்டியே தொடங்கிய பருவமழை:
தென்மேற்கு பருவமழை பொதுவாக கேரளா மாநிலத்தில் தொடங்கி, படிப்படியாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழைப்பொழிவை தரும். இந்த மழைப்பொழிவு காரணமாக தமிழகத்தில் உள்ள பல அணைகள் முழுமையாக நிரம்பும். 2025 ஆம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அதாவது, மே மாதத்திலேயே தொடங்கி, கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பதிவு செய்யப்பட்டது.
அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக் காலங்களில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு பகுதிகளின் தாக்கத்தால் மழை பெய்யும்.
மேலும் படிக்க: இருமல் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருந்தது கூட தெரியாத ஒரு அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..
தொடங்கும் வடகிழக்கு பருவமழை – பிரதீப் ஜான்:
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17 முதல் 19ஆம் தேதி வரை தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், தென்மேற்கு பருவமழை முழுமையாக நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதீப் ஜான் தனது X வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உள் தமிழக மாவட்டங்களான கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் காற்றின் திசை மாறியுள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று தற்போது கிழக்கு திசையில் இருந்து வீசத் தொடங்கியுள்ளது. இது வரவிருக்கும் 2025 அக்டோபர் 16ஆம் தேதிக்குள் முழுமையாக கிழக்கு திசையை நோக்கி நகரும். அதன் பின்னர் அக்டோபர் 17 முதல் 19ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.