SIR -க்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்.. த.வெ.க தரப்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டாம்..
TVK Protest: தமிழக வெற்றி கழகம் தரப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்வதால் பலரின் வாக்குரிமை பறிக்கப்படும் எனக் கூறி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நவம்பர் 15, 2025 தேதியான நேற்று, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இந்த நடவடிக்கை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 16, 2025: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து, தமிழக வெற்றி கழகம் தரப்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
SIR க்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்:
குறிப்பாக, தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திருத்தப் பணிகள் மேற்கொள்வது சரியான நேரம் அல்ல என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தடை இல்லை என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முழுவதிலும் இந்த திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: ‘SIR பணிகளில் திமுக தலையீடு’.. அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!
92% மக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள்:
தமிழகத்தைப் பொறுத்தவரையில், தற்போது வரை 92 சதவீத படிவங்கள் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கிட்டு படிவங்கள் சேகரிக்க வீடு தோறும் வருகை தரும் போது, வாக்காளர்கள் தங்களது நிரப்பப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
த.வெ.க தரப்பில் ஆர்ப்பாட்டம்:
SIR குளறுபடிகளை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் நமது கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க நடத்தப்படும் போராட்டத்தைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை ஆளும் திமுக அரசும் அவர்களின் காவல்துறையும் மேற்கொண்டு வருகிறது. அதைத் தவிடுபொடியாக்கி நாம் இன்று போராட்டத்தை நடத்தி வருகிறோம்.
நேற்று… pic.twitter.com/ilLKWscDaW— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) November 16, 2025
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் தரப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்வதால் பலரின் வாக்குரிமை பறிக்கப்படும் எனக் கூறி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நவம்பர் 15, 2025 தேதியான நேற்று, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இந்த நடவடிக்கை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில், “இந்தியா அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருக்க உரிமைகளில் மிக முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கான அடையாளம் வாக்குரிமை. வாக்குரிமை கொஞ்சம் ஏமாந்தால், நம்மைப் போல லட்சக்கணக்கான மக்களின் நிலை இதுதான், ஓட்டு போட முடியாத நிலை வந்துவிடலாம். இதற்கு காரணம் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணி தான். இந்தப் பணிகள் மூலம் உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே வாக்காளர்கள் படிவத்தை ஆராய்ந்து கவனமாக நிரப்பி கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்:
இந்த சூழலில், தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை என அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை சேப்பாக்கத்தில் பொதுச்செயலாளர் ஆஆனந்த் மற்றும் ஆதார்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்”, “தமிழர்களின் வாக்குரிமை பறிக்கக்கூடாது” என கோஷங்கள் எழுப்பப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.