தமிழகத்தில் இனி மழை இருக்காது.. அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் – வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: ஜனவரி மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் பனிமூட்டம் குறைந்திருந்த நிலையில், கடந்த வாரம் குமரி கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், வெப்பநிலை மீண்டும் கணிசமாக குறையத் தொடங்கியது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.
வானிலை நிலவரம், ஜனவரி 14, 2026: கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தவிர, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லையில் பதிவான 7 செ.மீ மழை:
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பதிவாகியது. இந்த நிலையில், கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக தென் தமிழக பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து (திருநெல்வேலி) 9 செ.மீ., நாலுமுக்கு (திருநெல்வேலி) 7 செ.மீ., காக்காச்சி (திருநெல்வேலி) 7 செ.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி) 5 செ.மீ., இளையான்குடி (சிவகங்கை) 5 செ.மீ., நாகுடி (புதுக்கோட்டை) 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: சென்னை வாசிகளே…பொங்கல் விடுமுறைக்கு இங்க போங்க…செம என்ஜாய்மெண்ட்டா இருக்கும்!
மேலும், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அடையாமடை (கன்னியாகுமரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை தான் இருக்கும்:
இதனைத் தொடர்ந்து, வரக்கூடிய நாட்களில், அதாவது ஜனவரி 16 முதல் 20 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை பெரும்பாலும் இயல்பான அளவிலேயே இருக்கும் என்றும், பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்…இறுதி கட்டத்தில் பணிகள்…கார்,டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள்!
ஜனவரி மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் பனிமூட்டம் குறைந்திருந்த நிலையில், கடந்த வாரம் குமரி கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், வெப்பநிலை மீண்டும் கணிசமாக குறையத் தொடங்கியது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.
அதிகாலை நேரத்தில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு:
அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். மேலும், பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகளும் தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.