தமிழகத்தில் இருந்து இன்று விலகும் வடகிழக்கு பருவமழை.. மீண்டும் பனிமூட்டம் தொடரும் – வெதர்மேன் பிரதீப் ஜான் ரிப்போர்ட்..
North East Monsoon: தொடர்ச்சியாக தமிழகத்தில் நல்ல மழை இருந்த சூழலில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் - தமிழ்நாடு வெதெர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், ஜனவரி 17, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 17, 2026 தேதியான இன்று விலகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. பொதுவாக, இந்த பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் முடிவடையும். ஆனால், இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை சற்று நீடித்து, தற்போது தமிழகத்திலிருந்து விலகும் என கணிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை எப்படி இருந்தது?
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக, வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சிகள் உருவாகி புயல்களாக வலுப்பெறுவதன் மூலம் அதிக மழை கிடைக்கும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வங்கக்கடலில் மோன்தா புயல் உருவானது. இதன் காரணமாக வடகடலோர தமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பதிவானது.
மேலும் படிக்க: பாசிசவாதிகளை விரட்டி தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..
இதனைத் தொடர்ந்து, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து வடகடலோர தமிழக மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது. வெப்பச் சலனம் காரணமாக மட்டும் அவ்வப்போது மிதமான முதல் கனமழை வரை பதிவானது. ஆனால், தென் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்தது.
இந்த சூழலில், நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் டிட்லி புயல் உருவானது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பதிவானது. மேலும், இந்த புயல் வலுவிழந்து சென்னைக்கு அருகே சுமார் 48 மணி நேரம் நிலைத்திருந்ததால், வடகடலோர தமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பதிவானது.
தமிழகத்தில் இருந்து விலகும் வடகிழக்கு பருவமழை:
Wish you all a Happy Pongal, the North East Monsoon will officially withdraw on 16.01.2025/17.01.2025 from the state. The cold nights and misty / foggy mornings will be back.
In the last 15 years
———-
NEM 2025 – 16/17.01.2026
NEM 2024 – 27.01.2025 (most delayed withdrawal)… pic.twitter.com/AbHacC1XZK— Tamil Nadu Weatherman (@praddy06) January 15, 2026
மேலும், கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. வங்கக்கடலில் உருவான சுழற்சி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவானது.
தொடர்ச்சியாக தமிழகத்தில் நல்ல மழை இருந்த சூழலில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்திலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக இன்றிலிருந்து தமிழகத்திலிருந்து விலகுகிறது. குளிர்ந்த இரவுகளும், பனிமூட்டத்துடன் கூடிய அதிகாலை நேரங்களும் மீண்டும் தமிழகத்திற்கு திரும்பக்கூடும். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, வடகிழக்கு பருவமழை பொங்கலைத் தாண்டியும் தொடர்வது ஒரு தொடர்ச்சியான போக்காக உள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.