உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தொடங்கியது மழையின் ஆட்டம்.. பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
Tamil Nadu Weather Alert: கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், அக்டோபர் 21, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இந்த சூழலில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்:
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகே உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் நிலவும் தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 21, 2025 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இடமாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை:
அதே சமயம், கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மழையின் ஆட்டம் தொடங்கியது – பிரதீப் ஜான்:
New low pressure formed today close to TN coast – KTCC (Chennai) best days from this low are next 2-3 days (21-23 October) including today
====================
Delta, Cuddalore and Ramanthapuram gets heavy rains from the new low pressure area which has formed very close to the TN… pic.twitter.com/B7yo6POTRH— Tamil Nadu Weatherman (@praddy06) October 21, 2025
இது தொடர்பாக அவரது X (முன்னாள் ட்விட்டர்) வலைதள பதிவில், வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்; இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க: புகையால் சூழ்ந்த சென்னை.. காற்று மாசு 500-ஐ தாண்டியதால் அதிர்ச்சி..
உள் தமிழகத்திலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால் மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாதம் முடிவடைவதற்கு முன்னர், இயல்பை விட அதிகமான மழை பதிவாகும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்டா பகுதிகளுக்கு அருகில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து கடலூர் மாவட்டத்துக்கு, பின்னர் சென்னைக்கு அருகே நகரக்கூடும். இதன் காரணமாக படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.