படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கு? வானிலை ரிப்போர்ட்..

Tamil Nadu Weather Update: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கான வாய்ப்பு எப்படி இருக்கு? வானிலை ரிப்போர்ட்..

கோப்பு புகைப்படம்

Published: 

04 Jan 2026 06:15 AM

 IST

வானிலை நிலவரம், ஜனவரி 4, 2025: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் நாலுமுக்கு (திருநெல்வேலி) 5 செ.மீ, ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ, ஆதார் எஸ்டேட் (நீலகிரி) பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

இந்தச் சூழலில், தெற்கு கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும் படிக்க: அரசு அதிகாரிகள் மூட நம்பிக்கைகளுக்கு அடிபணியக்கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

இதன் காரணமாக, ஜனவரி 4, 2026 தேதியான இன்று தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜனவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சாதி பெயர் கூடாது… தீண்டாமை உறுதிமொழி… – ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான கட்டுபாடுகள் என்ன?

படிப்படியாக அதிகரிக்கும் வெயில்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரையில் 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னைப் பகுதிகளைப் பொருத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

ஷாருக்கான் நாக்கை அறுத்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்.. அதிர்ச்சி கிளப்பும் இந்து அமைப்புகள்
இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட 'சுனாமி ரெடி' கிராமங்கள்
தேவையில்லாத பொருட்களை வாங்குகிறீர்களா? மனநலப் பிரச்னையாக மாறும் ஆபத்து
கோஹினூர் வைரம் அணிவது துரதிர்ஷ்டமா? இதுதான் உண்மையான வரலாறு