3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை.. எங்கெங்கு தெரியுமா? வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மழை
சென்னை, ஆகஸ்ட் 27 : தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் (Tamil Nadu Weather) என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் இந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது. தற்போது, சென்னையில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதியான நேற்று ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேறகு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுவடையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும்.
Also Read : நீலகிரி டூ கோவை.. பிச்சு உதறபோகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்
3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்
மேலும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 27,28,29ஆம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read : இனி மழை இல்லை.. பொளக்கப்போகும் வெயில்.. அதிகரிக்கும் வெப்பநிலை..
அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.