அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த நான்கு தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை..  சென்னையில் எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

தமிழகத்தில் மழை

Published: 

09 Oct 2025 06:20 AM

 IST

சென்னை, அக்டோபர் 09 : தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையே பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, அதே பகுதியில் நிலவியது.

இது 2025 அக்டோபர் 8ஆம் தேதி அதே பகுதியில் நிலவியது. இது மேலும், கிழக்கு தென்கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் வலுவிழக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 அக்டோபர் 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபர் 9ஆம் தேதியான இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

Also Read : நெருங்கும் தீபாவளி…. ரூ.10 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை…. இந்த 7 விதிமுறைகளை பின்பற்றாத உணவு நிறுவனங்களுக்கு தண்டனை

4 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை

2025 அக்டோபர் 10ஆம் தேதி நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 அக்டோபர் 11ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Also Read : இனி தெருக்களுக்கு சாதிப் பெயர் கூடாது… அதற்கு பதிலாக ‘இந்த’ பெயர் வைக்கலாம்… – தமிழக அரசு உத்தரவு

மேலும், 2025 அக்டோபர் 12ஆம் தேதி கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2025 அக்டோபர் 9ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.