உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு முதலிடம் – மத்திய அரசு அறிவிப்பு

Economic Growth Report: இந்தியாவில் உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உற்பத்தி துறையில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 15 சதவிகிதம் தமிழ்நாடு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது.

உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

Published: 

28 Aug 2025 17:54 PM

மத்திய அரசு உற்பத்தி துறை குறித்து ஆண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த 2023 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் கடந்த ஆண்டில் உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு 5.92 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 1.95 கோடி பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தகவலை மாநில வாரியாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உற்பத்தித்துறையில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு (Tamil Nadu) முதலிடத்தை பிடித்துள்ளது. குஜராத் (Gujarat) இரண்டாவது இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்பில் அடைந்துள்ள வளர்ச்சி, மற்ற மாநிலங்களின் நிலை ஆகியவை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசு உற்பத்தி துறை குறித்த சர்வேயை வெளியிடுவது வழக்கம்.  அதில் உற்பத்தி துறையின் வளர்ச்சி எந்த வகையில் இருக்கிறது, அதில் என்ன பிரச்னைகள், மாநிலங்களின் நிலை ஆகியை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்படும். அதன்படி இந்த கடந்த 2023 – 2024 நிதியாண்டுக்கான ஆய்வு முடிவுகள் ஆகஸ்ட் 27, 2025 அன்று வெளியானது.

இதையும் படிக்க : தமிழகத்தின் மிக நீளமான பாலம்… திருவான்மியூர் – உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளமான மேம்பாலம் – தமிழக அரசு அறிவிப்பு

உற்பத்தியில் வளர்ச்சியடைந்த துறைகள்

இந்த ஆய்வில் கடந்த ஆண்டு உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு, அதற்கு முந்தையஆண்டை 5.92 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது இதன் மூலம் உற்பத்தி துறையில் தொழில்களின் முதலீடு 61, 39,212  கோடி ரூபாயில் இருந்து 68,01,329 கோடியாக உயர்ந்துள்ளது. குறைகளின் கிராஸ் வேல்யூ 21,97,056 கோடியில் இருந்து, 24, 58,336 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 11.9 சதவிகிதம் வளர்தச்சி அடைந்துள்ளது. உலோகங்கள் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், ரசாயனப் பொருட்கள், உணவு மற்றும் மருந்து ஆகிய துறைகள் உற்பத்தியில் நல்ல வளர்ச்சியைடந்துள்ளன.

தமிழ்நாடு முதலிடம்

மாநில அடிப்படையில் பார்க்கும்போது உற்பத்தி துறையில் அதிக வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 15 சதவிகிதம் தமிழ்நாடு வழங்கியுள்ளது.  அதற்கு இடத்தில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இது உற்பத்தி துறையில் தமிழ் நாடு அடைந்துள்ள வளர்ச்சியைக் காட்டுகிறது.

இதையும் படிக்க : 32 அரசு சேவைகள்.. இனி ஈஸியா வாட்ஸ் அப் மூலமே பெறலாம்.. எப்படி தெரியுமா? சென்னை மாநகராட்சி ஏற்பாடு

மேலும் இந்த ஆய்வு கடந்த பத்தாண்டுகளில் அதாவது 2014-15 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி துறையில் 57 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உறுவாகியுள்ளது. மேலும் இந்த ஆய்வானது, மின்சார வசதிகள், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் பதிவான நிறுவனங்களின் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு தேசிய அளவில் உற்பத்தி துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை காட்டுகிறது.