தமிழகத்தின் மிக நீளமான பாலம்… திருவான்மியூர் – உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளமான மேம்பாலம் – தமிழக அரசு அறிவிப்பு

Traffic Relief Ahead: சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளத்துக்கு ரூ.2,100 கோடி செலவில் மிக நீளமான மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்த பாலம் மூலம் மாமல்லபுரம், புதுச்சேரி செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் மிக நீளமான பாலம்...  திருவான்மியூர் - உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளமான மேம்பாலம் - தமிழக அரசு அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

Published: 

27 Aug 2025 15:28 PM

 IST

சென்னை, ஆகஸ்ட் 27: தமிழ்நாட்டில் மிகப்பெரிய முன்னேற்றமாக சென்னை  திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ தொலைவில் மிக நீண்ட பாலம் கட்டப்படவுள்ளது.  இந்த பாலமானது ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த மேம்பாலம், மாநில அரசால் திட்டமிடப்படும் மிக நீளமான மேம்பாலமாகும். இந்த மேம்பாலம் திருவான்மியூர் டைட்டல் பார்க்கில் இருந்து துவங்கி உத்தண்டி வரை நீள்கிறது. இதன் மூலம் பயண நேரம் 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக மாமல்லபுரம் சுற்றுலாதளங்களுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல இந்த பாலம் உதவிகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

தமிழக சாலை வசதி மேம்பாட்டில் முக்கிய முன்னேற்றமாக திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ நீளமான நான்கு வழிச்சாலை மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இதில் 16 முதல் 20 மீட்டர் அகலத்தில் பாதாரிகளுக்கு நடைபாதையும் உருவாக்கப்படுகிறது. இந்த பாலம் மிகவும் நெரிசலான 13 சந்திப்புகளை தாண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்பி ரோடு ஜங்சன், திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம், நீலாங்கரை, இஞ்சம்பாக்கம், அக்கரை போன்ற இடங்களில் வாகனம் வெளியேற வசதி உருவாக்கப்படும்.

இதையும் படிக்க : வரலாற்று சின்னம்.. அகற்றப்படும் பழைய பாம்பன் பாலம்.. டெண்டர் அறிவிப்பு!

தமிழக சாலை வசதி மேம்பாட்டில் பெரிய முன்னேற்றமாக, திருவான்மியூரிலிருந்து உதண்டி வரை 14.2 கி.மீ நீளமான நான்கு வழிச் சாலை பால் மேம்பாலம் (Elevated Corridor) கட்டப்படவுள்ளது. முன்னதாக மதுரை – நத்தம்  சாலையில் 7 கி.மீ தொலைவில் கட்டப்பட்ட பாலமே தமிழகத்தின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றிருந்தது. ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள இந்தத் திட்டம், மாநில அரசால் இதுவரை திட்டமிடப்பட்ட நீளமான மேம்பாலமாகும்.

சுற்றுலா பயணிகளுக்கு பலன்

தற்போது திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை பயணம் செய்ய சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. இந்த மேம்பாலம் உருவான பின், இந்த பயண நேரம் 15 முதல் 20 நிமிடங்கள் குறையும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாமல்லபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வோர் இந்த மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக செல்ல முடியும். அதே போல ஓஎம்ஆர் சாலைக்கு மாற்றுப் பாதையாகவும் இந்த மேம்பால்தை பயன்படுத்த முடியும்.

இதையும் படிக்க : ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி.. அரசு எடுத்த நடவடிக்கை..

இந்த திட்டம் தனியார் பங்குதாரர்கள் மற்றும் வங்கி கடன் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதனால் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.  ஆனால் நாம் பயணிக்கும் தொலைவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் இந்த திட்டத்தை மேற்கொள்கிறது.

இதற்கு முன் எல்.பி.ரோடு, திருவான்மியூர் ஆர்டிஆ ஆகிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தனித்தனி மேம்பாலம் அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை ஒரே நீளமான மேம்பால திட்டமாக மாற்றி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Follow Us
Related Stories
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
சென்னை எழும்பூரில் வரப்போகுது மெகா அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்… எப்போது தெரியுமா?
20 நாட்களுக்கான கையிருப்பில் வீட்டு சிலிண்டர்கள்.. விற்றுத் தீர்ந்த வணிக சிலிண்டர்கள்.. சென்னையில் ஹோட்டல்கள் மூடல்..
தேஜ கூட்டணியில் விஜய்க்கு முதல்வர் பதவி? முக்கிய புள்ளிகள் மூலம் தூது.. ஆஃபரை ஏற்பாரா.. எதிர்பாரா!
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு