ஏமாற்றிய மழை… வழக்கத்தை விட 3 சதவிகிதம் குறைவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Northeast Monsoon: இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை வழக்கத்தை விட 3 சதவிகிதம் குறைவாக பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல இந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தை விட 95 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

ஏமாற்றிய மழை... வழக்கத்தை விட 3 சதவிகிதம் குறைவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

31 Dec 2025 20:37 PM

 IST

சென்னை, டிசம்பர் 31: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த கணிப்புகள் இருந்த நிலையில், உண்மையான மழை அளவுகள் அதற்கு மாறாக பதிவாகியுள்ளன. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பெய்த வடகிழக்கு பருவமழை அளவு சாதாரணத்தை விட 3 சதவீதம் குறைவாகவே உள்ளது. பொதுவாக தமிழ்நாட்டுக்கு முக்கியமான மழையை வழங்கும் வடகிழக்கு பருவமழை, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தாமதமாகத் தொடங்கியது. மேலும், இந்த பருவமழைக் காலத்தில் சாதாரணத்தை விட கூடுதலாக 50 செ.மீ. வரை மழை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ஆரம்பத்தில் கணிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவானது. அதேபோல், வங்கக் கடலில் உருவான தித்வா புயல் இலங்கை வழியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை ஒட்டிச் சென்றது. இதன் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் திடீரென மழை பெய்தது. மேலும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக பரவலான மழை பதிவாகியது.

இதையும் படிக்க : புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செல்ல இலவச பேருந்து வசதி…புதுச்சேரியில் அசத்தல் அறிவிப்பு!

வழக்கத்தை விடை 3 சதவிகிதம் குறைவு

பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் என்பதால், மேலும் ஒரு புதிய புயல் அல்லது தாழ்வுப் பகுதி உருவாகி கூடுதல் மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தித்வா புயலுக்குப் பிறகு புதிய புயல் எதுவும் உருவாகவில்லை. புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சாதாரணமாக  44.2 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரை, மாநிலம் முழுவதும் சராசரியாக 42.8 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இது சாதாரணத்தை விட 3 சதவீதம் குறைவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியில் வழக்கத்தை விட 95 சதவிகிதம் மழை

சென்னையைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை 10 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. பொதுவாக அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை சென்னை நகரில் 809.6 மில்லிமீட்டர் மழை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு 724.8 மில்லிமீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் அதிகப்படியான மழை பதிவான மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் சாதாரணமாக 514 மில்லிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், இந்த ஆண்டு 1,005 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது சாதாரணத்தை விட 95 சதவீதம் அதிகமாகும்.

இதையும் படிக்க : 2026-இன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி…எப்போது நடக்கிறது தெரியுமா…வெளியான அறிவிப்பு!

முன்னதாக, இந்த ஆண்டு வட மாவட்டங்களில் அதிக மழை கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அங்கு பெய்த மழை அளவு சாதாரணத்தை விட குறைவாகவே இருந்தது. இதனால், பருவமழை குறித்த முன்னறிவிப்புகள் ஒரு கனவாகவே மாறியுள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. 2 ஏசி பெட்டிகள் தீயில் நாசம்!
டெல்லி குண்டுவெடிப்பில் 40 கிலோ உயர்தர வெடிப்பொருட்கள் - அமித் ஷா பகீர் குற்றச்சாட்டு
சோகத்தில் முடிந்த ஹனிமூன்.. புதுமண தம்பதி தனித்தனியே தற்கொலை!
தவறாக பயன்படுத்தப்படும் ‘ஆன்டிபயாடிக்’.. வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல் என எச்சரிக்கும் மருத்துவர்கள்..