Tamil Nadu News Live: தவெக மாநாடு.. முன்னேற்பாடுகள் தீவிரம்
Tamil Nadu Breaking News Today 17 August 2025, Live Updates: தமிழ்நாட்டில் தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. இந்த நிலையில் புது வரவான தவெக மாநில மாநாட்டை மதுரையில் வைத்துள்ளது

LIVE NEWS & UPDATES
-
கூட்டணி அறிவிப்பு வரமா?
2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் விஜய் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்சிப்பணிகள் குறித்தும், கட்சி நிர்வாகிகள் பணிகள் குறித்து பேச வாய்ப்பு
-
TVK Meeting : 4 இடங்களில் பார்க்கிங் வசதி
தவெக மாநாட்டிற்காக, 1000 அடி நீளத்தில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையில் கொள்கை தலைவர்கள் படங்கள் மற்றும் லேசர் வழியில் தவெக தலைவர் விஜய் புகைப்படங்கள் இடம் பெற உள்ளது. மேலும், 4 இடங்களில் பார்க்கிங் வசதி
-
தவெக மாநாடு – 500 ஏக்கரில் இடம்
வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரை பாரப்பத்தி பகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
-
TVK Madurai Meeting : தவெக மதுரை மாநாடு அப்டேட்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பார்க்கிங், குடிநீர், உணவு என அனைத்து விதமான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
தள்ளிவைக்கப்பட்ட மாநாடு
பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. நாகாலாந்து ஆளுநர் கணேசன் மறைவை அடுத்து அந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புது தேதி வைக்கப்பட்டு அமித்ஷா வருகை திட்டமிடப்பட்டுள்ளது
-
Amit Shah Tamil Nadu Visit : தமிழகம் வரும் அமித்ஷா.. பிளான் என்ன?
நெல்லையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறும் பாஜக த பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்
-
நாள் வாரியாக முன்பதிவு விவரம்
அக்டோபர் 16 முதல் அக்டோபர் 22 வரையிலான முன்பதிவு விவரங்களை ரயில்வே அறிவித்துள்ளது. நாள் வாரியாக முன்பதிவு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது
-
Diwali Train Booking : தீபாவளி – ரயில் டிக்கெட்
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று ஆகஸ்ட் 17, 2025 முதல் தொடங்கப்படுகிறது
-
அமலாக்கத்துறை ரெய்டு – மு.க.ஸ்டாலின் பேச்சு
உறவினர்கள் வீட்டில் ரெய்டு என்றதும் ஓடி வந்து கூட்டணியில் சேர நாங்க என்ன பழனிசாமியா என சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ரெய்டுக்கெல்லாம் நாங்கள் அச்சப்பட மாட்டோம் என பேச்சு
-
பிளாஸ்டிக் தடை – பக்தர்களுக்கு உத்தரவு
ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழப்பொருட்களின் பயன்பாட்டிற்கும் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இனி கோயில்களுக்கு வரும்போது, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என உத்தரவு
-
பிளாஸ்டிக் தடை – 12 கோயில்கள் என்னென்ன?
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிசுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்நாதசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில்
-
12 கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
சுற்றுசூழலை பரமாரிக்கும் விதமாக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 12 திருக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த அறநிலையத்துறை தடை விதித்தள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாறாக, இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
ரயிலில் இறக்கிய நபர் யார்? விசாரணை
மீட்கப்பட்ட குழந்தை, ஆலந்தூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ரயிலில் குழந்தையை இறக்கிய நபர் குறித்து போலீசார் விசாரணை
-
அதிகாலை 4.30 மணியளவில் சம்பவம்
ஆகஸ்ட் 16ஆம் தேதியான நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ரோந்து பணியில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, சானடோரியம் ரயில் நிலையத்தில் 3 வயது குழந்தை நடைமேடையில் தனியார் சுற்றி திரிந்துள்ளது.
-
ரயில் நிலையத்தில் தனியாக நின்ற 3 வயது குழந்தை
சென்னை சானடோரியம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட 3வயது குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டனர். ரயிலில் பயணித்த நபர், சானடோரியம் ரயில் நிலையத்தில் குழந்தையை இறக்கிவிட்டு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.
-
Chennai Rains: சென்னை வானிலை நிலவரம் இன்று
சென்னையை பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம்
-
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
2025 ஆகஸ்ட் 18ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை மையம் தகவல். இதனால் சில இடங்களில் கனமழை இருக்கலாம்.
-
நீலகிரி மற்றும் கோவையில் கனமழை
கேரள எல்லை மாவட்டங்களான நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Tamil Nadu Weather : தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக, இன்று வட தமிழகம், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
Breaking News in Tamil Today 17 August 2025, Live Updates: புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் ஆகஸ்ட் 17, 2025 அன்று பாமக நிறுவனர் ராமதாஸ் ( Ramadoss) தலைமையில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிலையில், பொதுக்கூட்டத்தில் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை (Chennai News) தேனாம்பேட்டையில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 17, 2025 அன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படடவிருக்கிறது. அதுகுறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.எதிர்கட்சித் தலைவரும், அதிகமு பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த பகுகியில் பார்க்கலாம். தீபாவளி (Diwali Update) பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, ரயிலில் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 17, 2025 அன்று முதல் துவங்குகிறது. இப்படியான பல தகவல்களை இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க
Published On - Aug 17,2025 7:00 AM