மாதாந்திர மின் கட்டணம் எப்போது? அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!

Minister Sivasankar On EB Bill : தமிழகத்தில் மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். மாதம் இரண்டு முறை மின்கட்டணம் கணக்கீடப்பட்டு வருகிறது. மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறையில் வந்தால், நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

மாதாந்திர மின் கட்டணம் எப்போது? அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!

அமைச்சர் சிவசங்கர்

Updated On: 

03 Sep 2025 10:10 AM

சென்னை, செப்டம்பர் 03 : தமிழகத்தில் மாதாந்திர முறையில் மின் கட்டணம் முறை (Tamil Nadu Electricity Bill) எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் (Minister Sivasankar) விளக்கம் அளித்துள்ளார். தற்போது, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மாதம் ஒருமுறை வசூலிக்கும் திட்டம் அவர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் 3 கோடிக்கு அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. தமிழகத்தில் வீடு, தொழில்நிறுவனங்கள், விவசாய நிலங்களுக்கு மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடுகளுக்கான மின்சாரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என நுகர்வோர்கள் கூறி வருகின்றனர்.

மாதந்தோறும் மின் கட்டணம் எப்போது?

2021ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தப்படும் என கூறியிருந்தது. ஆனால், திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளாகியும் இந்த அறிவிப்பு கிடப்பிலேயே உள்ளது. இதற்காக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிவசங்கர், “வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணி முடிவடைந்ததும், மின் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படும். மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பது எளிமையாக இருக்கும்என தெரிவித்தார்.

Also Read : போராட்டத்தில் போலீசார் மீது தாக்குதல்.. வடமாநில தொழிலாளர்கள் விவரம் சேகரிப்பு!

நடுத்தர மக்கள் ஹேப்பி

மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில்,  இது நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், தற்போதைய நடைமுறைப்படி, 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் என்றால், மின்கட்டணம் கணிசமாகவே இருக்கும். மேலும், மொத்த பணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும், 400 முதல் 500 யூனிட் மின்சார பயன்பாடு மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கீட்டால், 400 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு செல்கிறது. இதனால், மின்கட்டணமும் அதிகமாக செல்கிறது. எனவே, மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கீட்டால் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Also Read : ரூ.60 கோடியில் போதை மிட்டாய்.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய 2 பேர்!

ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை 1 கோடிக்கு மேல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் தோரையமாக 2 கோடிக்கு மேல் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டிய உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் தானாக மின் பயன்பாடு கணக்குகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தற்போது பொருத்தப்பட்டிருககும் மீட்டர்களில் மின் பணியாளர் ஒருவர் நேரில் வந்து, பயன்பாட்டுக் கணக்கை அட்டையில் குறிக்க வேண்டி உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், இந்த வேலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.