ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… டெட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை!
TET Exam : ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வு கட்டாயம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அக்டோபர் 01 : ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கி இருந்தது. இது தொடர்பாக தான் தற்போது தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. ஆசிரியர்கள் பணியில் சேர டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு 2011 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இடைநிலை ஆசிரியர்கள் டெட் தாள் ஒன்றிலும், இடை பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வில் இருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலே ஆசிரியர்கள் பணிக்கு அவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தான் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கி இருந்தது. அதாவது அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்பான தீர்ப்பை செப்டம்பர் ஒன்றாம் தேதி நீதிமன்றம் வழங்கியது. அதன்படி, ஆசிரியர் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதோடு ஐந்தாண்டுகளுக்குள் ஓய்வு பெறுபவர்கள் தெற்கு தெருவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்திருந்தது.
Also Read : சென்னை ஏர்போர்ட்டில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் சிக்கிய நடிகர்!




டெட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
எனவே ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் தெற்கு தேர்வு கட்டாயம் என தெரிவித்தது. இல்லை எனில் ஆசிரியர்கள் அவர்கள் வேலையை விட்டு விலகலாம் அல்லது இறுதி சலுகைகள் கட்டாய ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது டெட் தேர்வு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், தமிழகத்தில் மட்டும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 4,49,850 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 3,90,458 பேர் டெட் தகுதித் தேர்வு பெறாதவர்கள்.
Also Read : தமிழ்நாட்டில் அக்டோபர் 3ம் தேதி விடுமுறையா? – உண்மை இதுதான்!
உச்ச நீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தப்பட்டால், முழு பள்ளி அமைப்பு சரிவை சந்திக்கும். ஆசிரியர்கள் பெருமளவில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ஏ கல்விக்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவு அதற்கு நேர்மாறாக இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை 2025 அக்டோபர் 19ஆம் தேதி விசாரணைக்கு வரும் என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.