தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஆட்சியர்களுக்கு உத்தரவு.. தமிழக அரசு அறிவிப்பு!

Tamil Nadu Conservancy Workers : தமிழகத்தில் கிராமப்புறங்களில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வாரத்திற்கு ஒரு நாளுக்கு மேலாக விடுப்பு எடுத்தால், ஊதியத்தில் ரூ.160 பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஆட்சியர்களுக்கு உத்தரவு.. தமிழக அரசு அறிவிப்பு!

தூய்மை பணியாளர்கள்

Updated On: 

23 Aug 2025 07:16 AM

சென்னை, ஆகஸ்ட் 23 :  கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு (Conservancy Workers) சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதுதமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு கீழ் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாட்கள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியாற்றி வருகின்றனர். இதனால், இவர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்தாலும், அன்றைய நாள் சம்பவம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தூய்மை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. 2021ஆம் ஆண்டு திமுகவின் முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் என திமுக அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை அது செயல்படுத்தப்படவில்லை. இதனால், தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு கோரியும் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் கூட, சென்னை, மதுரையில் போராட்டங்கள் நடைபெற்றன.

Also Read : ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. தென்மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

அதாவது, சென்னையில் 2025 ஜூலை மாதம் மண்டலம் 5 மற்றும் மண்டலம் 6ல் இருக்கக்கூடிய தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டனர். இதனை கண்டித்து 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 13 நாட்கள் ரிப்பள் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராடினார். இதனை அடுத்து, உயர் நீதிமன்ற உத்தவிட்டதை அடுத்து, அவர்களது போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, மதுரையிலும் போராட்டம் நடந்தது.

தூய்மை பணியாளர்களுக்கு குட் நியூஸ்

அதாவது, நியாயமான ஊதிய உயர்வு, போனஸ், பணி நிரந்தரம் உள்ளிட்ட 28 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இப்படியான சூழலில்,  ஊரக வளர்ச்சித்துறை தூய்மை பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கிராமப்புறங்களில் வீடு தோறும் குப்பைகளைக் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்கலாம் என தெரிவித்தது.

Also Read : ” உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள் ” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..

தூய்மை காவலர்கள் வாரத்திற்கு ஒருநாள் விடுப்பு எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு ஒரு நாளுக்கு மேல் விடுமுறை எடுத்தாவ்ல, ஒரு நாள் ஊதியாக ரூ.160 பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.