தமிழ் புத்தாண்டு – வாரவிடுமுறை… சொந்த ஊர் செல்ல ஸ்பெஷல் பேருந்துகள் ரெடி!

Special Buses For Tamil New Year : தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் வார விடுமுறையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு நாள்களில் இயக்கப்பட உள்ளது.

தமிழ் புத்தாண்டு - வாரவிடுமுறை... சொந்த ஊர் செல்ல ஸ்பெஷல் பேருந்துகள் ரெடி!

தமிழ்புத்தாண்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

Updated On: 

08 Apr 2026 12:15 PM

 IST

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 14- ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்வார்கள். தமிழ் புத்தாண்டோடு சேர்த்து, வார விடுமுறை நாட்களும் வருவதால் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், கூடுதலான பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பார்கள். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் வார விடுமுறையோடு சேர்த்து தமிழ் புத்தாண்டு விடுமுறையும் வருகிறது. இதற்காக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்துகளோடு சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து 970 சிறப்பு பேருந்துகள்

அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, நாகர்கோவில், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய உங்களுக்கு வருகிற ஏப்ரல் 10- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 11- ஆம் தேதிகளில் ( சனிக்கிழமை) 970 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, பெங்களூரு, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 190 சிறப்பு பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து 24 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள்.. 5,900 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சொந்த ஊர்களில் இருந்து திரும்பவதற்காக 735 பேருந்துகள்

இதே போல, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு, ஈரோடு ஆகிய ஊர்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் இடப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 12- ஆம் தேதி) மற்றும் ஏப்ரல் 14- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தங்களது சொந்த ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு திரும்பும் பொது மக்களுக்கு வசதியாக பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப 735 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்

இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது டி.என்.எஸ்.டி.சி. மொபைல் ஆப்பின் மூலமா முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டு நாளில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, நிகழாண்டும் தமிழ் புத்தாண்டு மற்றும் வார விடுமுறை நாள்களையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க: சாத்தான்குளம் எதிரொலி: லத்திக்கு பூட்டு, காவல்துறை விசாரணைக்கு புதிய விதி..!

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?