CM Vijay Swearing-in Ceremony Live: முதலமைச்சராகும் விஜய்.. அமைச்சர்கள் யார் யார்?
Tamil Nadu Government Formation Live News Updates in Tamil: 2026ம் ஆண்டு தமிழ்நாடு தேர்தல் பல பரபரப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது. புதியதாக கட்சி தொடங்கிய விஜய் அதிக சீட்டுகளை வென்று முதலமைச்சர் ரேஸில் முன்னேறினார். ஆனாலும் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டு மற்ற கட்சிகள் ஆதரவு அளித்தன. இந்நிலையில் இன்று அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

விஜய் பதவியேற்பு
LIVE NEWS & UPDATES
-
ம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்பு
விஜய் பதவியேற்பு விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்றுள்ளனர். அதுபோக தவெக வின் முக்கிய மாவட்ட தலைவர்கள், அமைச்சர்கள் குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர்
-
திரைப்பிரபலங்களும் வருகை
நடிகை த்ரிஷா உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்குபெறுவதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை
-
TVK Vijay : பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகை தந்த விஜய்க்கு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
-
நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார் விஜய்
முதல்வராக பதவியேற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வருகை தந்தார்
-
விழாவில் பங்கேற்கும் த்ரிஷா
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை த்ரிஷா வீட்டில் இருந்து கிளம்பினார்
வீடியோ
#WATCH | Tamil Nadu: Actor Trisha Krishnan leaves from her residence in Chennai. pic.twitter.com/M7XFTKyKSt
— ANI (@ANI) May 10, 2026
-
CM Vijay Swearing-in : இன்று 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்பு
தவெக தலைவர் விஜய்யுடன் சேர்ந்து இன்று 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். மிக முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது
-
ராகுல்காந்தி பங்கேற்பு
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தமிழ்நாடு வருகை.
-
முக்கிய உறவினர்கள் வருகை
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக விஜய் தாய் , தந்தை உள்ளிட்ட முக்கிய உறவினர்கள் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகை
-
Vijay : விஜய்க்கு உற்சாக வரவேற்பு
விஜய் செல்லும் வழியெல்லாம் அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்
வீடியோ
#WATCH | Tamil Nadu: TVK Chief and CM-designate Vijay leaves from his residence.
He will take oath as the Chief Minister of Tamil Nadu today at Jawaharlal Nehru Stadium in Chennai.
(Source: TN DIPR) pic.twitter.com/Cydz5VkjfC
— ANI (@ANI) May 10, 2026
-
TVK Vijay : முழு பாதுகாப்பு கான்வாய் பாதுகாப்பு
முதலமைச்சருக்கான முழு பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன் தவெக தலைவர் விஜய் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார்
-
புறப்பட்டார் விஜய்
இன்று பதவியேற்பு நடக்கவுள்ள நிலையில் தன்னுடைய நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
-
TVK Vijay Swearing-in : இன்று பதவியேற்கும் விஜய்
டிவிகே தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். காலை 10 மணிக்கு அவர் தமிழகத்தின் ஒன்பதாவது முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்தப் பதவியேற்பு விழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியும் இதில் கலந்துகொள்வார். நேற்று, சனிக்கிழமை, அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நேற்று மாலை, லோக்பவனில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மற்ற கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களையும் விஜய் ஆளுநரிடம் வழங்கினார். தேவையான பெரும்பான்மையை விட அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் இருப்பதாக விஜய் ஆளுநருக்கு உறுதியளித்தார். இந்நிலையில் இன்று அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் காணலாம்