நான் முதல்வன் திட்டம் மூலம் UPSC தேர்வில் அசத்தும் தமிழக மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெசிழ்ச்சி பதிவு..

இது தொடர்பாக போட்டித் தேர்வுகள் கூடுதல் இயக்குநர் சங்கர சரவணன் கூறுகையில், தமிழகத்திலிருந்து தேர்வான 60 பேரில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான் முதல்வன் திட்டம் மூலம் UPSC தேர்வில் அசத்தும் தமிழக மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நெசிழ்ச்சி பதிவு..

கோப்பு புகைப்படம்

Published: 

07 Mar 2026 09:05 AM

 IST

சென்னை, மார்ச் 7, 2026: 2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே. இவர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் முதல்வன் முயற்சியின் முதல் பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்றால், அதன் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் சாதனை:

இது தொடர்பாக போட்டித் தேர்வுகள் கூடுதல் இயக்குநர் சங்கர சரவணன் கூறுகையில், தமிழகத்திலிருந்து தேர்வான 60 பேரில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் எந்த மாநில அரசும் எடுக்காத முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும் குறிப்பிட்ட ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இருந்தாலும் பலர் அரசு பயிற்சி மையங்களிலேயே படிக்க விரும்புகின்றனர். அதற்கு அதன் மீது உள்ள நம்பிக்கையே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

முதல்வர் ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு:

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் முதல்வன் 2.0” பற்றி அறிவித்த நாளிலேயே இத்தகைய வெற்றி செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது.

“நான் முதல்வனின் முதல் பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்றால், அதன் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பாருங்கள். நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி