’மலிவான அரசியல் செய்கிறார்’ ஆளுநரை காட்டமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin : தமிழ்த் தாய் வாழ்த்தை மதிக்காதவர் ஆளுநர் ரவி, மிகவும் மலிவான அரசியல் செய்து வருகிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ரவி தமிழகத்தில் தான் இருக்க வேண்டும் எனவும் அப்போது தமிழ், தமிழகத்தை பற்றி அறிந்து கொள்வார் எனவும் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
தருமபுரி, ஆகஸ்ட் 17 : தமிழகத்தில் ஆளுநர் கம்பு சுத்தக்கூடாது எனவும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் (Governor Ravi) கம்பு சுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) விமர்சித்துள்ளார். தருமபுரிக்கு பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், 2025 ஆகஸ்ட்1 7ஆம் தேதியான இன்று ரூ.512 கோடி மதிப்பிலான 1,044 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, ரூ.362.77 கோடி மதிப்பில் 1,073 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகள் இணைய வழியில் பயிர்க்கடன் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு துறைகளில் ரூ.830 கோடி மதிப்பில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலினை, ஆளுநர் ரவி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், ”மலிவான அரசியல் செய்கிறார் ஆளுநர். ஆளுநர் திமுக ஆட்சி மீது அவதூறு பரப்பு வருகிறார். சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பார். இல்லாத திருக்குறவை அச்சிட்டு கொடுப்பார். தமிழ்த்தாள் வாழ்த்தை அவமதிப்பார். தமிழகத்தில் கல்வி, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறி வருகிறார். இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதையெல்லாம் தாங்க முடியாமல் ஏரிச்சலில் பொதுமேடையில் கொட்டித் தீர்த்து வருகிறார் ஆளுநர். இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களிலேயே முதல் இடத்தில் உத்தர பிரதேசம் தான் உள்ளது.
Also Read : ” ரெய்டு என்றதும் கூட்டணியில் சேர நாங்கள் என்ன பழனிசாமியா” – முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்..
”மலிவான அரசியல் செய்கிறார் ஆளுநர்”
அதனால், ஆளுநர் கம்பு சுற்ற வேண்டிய தமிழகத்தில் அல்ல. உத்தர பிரசேதத்தில் தான். தமிழுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு எதிராக பேசி வரும் ஆளுநரை வைத்து இழிவான அரசியலை பாஜக செய்து வருகிறது. தமிழகத்தில் ஆளுநர் இருப்பது தான் நல்லது. அப்போது தான் தமிழ், தமிழகத்தை பற்றி அவர் அறிந்து கொள்வார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தருமபுரி மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்தார். அவர் பேசுகையில், “தருமபுரியில் பேருந்து வசதி இல்லாத 8 கிராமங்கள் போக்குவரத்து வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் 2.87 லட்சம் பேர் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுகின்றனர். தருமபுரி சிப்காட் பூங்காவுக்கு 200 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்படும்.
Also Read : அமெரிக்கா வரி.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!
63 மலைக்கிராம பழங்குடியின மக்கள், பொதுமக்கள் வசதிக்காக சித்தேரி ஊராட்சி ஆரூர் வருவாய் வட்டத்துடன் இணைக்கப்படும். நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். ஒகேனக்கல் – தருமபுரியை இணைக்கும் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படும்” என்றார்.